இந்திய வம்சாவளிக்கு அமெரிக்க அரசு பதவி

Updated : ஏப் 03, 2022 | Added : ஏப் 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
வாஷிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை, அரசின் முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்துஉள்ளார். கடந்த மாதம், ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜாவை, கொரோனா தடுப்பு ஆலோசகராக நியமித்தார். அத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, புனீத் தல்வார், ஷெபாலி ரஸ்தான் துகால் ஆகியோரை முறையே மொராக்கோ, நெதர்லாந்து துாதர்களாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை, அரசின் முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்துஉள்ளார்.



latest tamil news



கடந்த மாதம், ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ஜாவை, கொரோனா தடுப்பு ஆலோசகராக நியமித்தார். அத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, புனீத் தல்வார், ஷெபாலி ரஸ்தான் துகால் ஆகியோரை முறையே மொராக்கோ, நெதர்லாந்து துாதர்களாக அறிவித்தார். இந்நிலையில், ஜோ பைடன் மேலும் இரு இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.


latest tamil news



சட்ட வல்லுனரும், சமூக உரிமை ஆர்வலருமான கல்பனா கோடகல், சமத்துவ வேலைவாய்ப்பு ஆணையத்தின் ஆணையர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலன் உள்ளிட்ட சமூக உரிமைகளுக்காக கல்பனா கோடகல் பல வருடங்களாக போராடி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணக்கு தணிக்கையாளரான வினய் சிங், வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் தலைமை நிதி அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே ஒபாமா அரசில் துணை உதவி செயலராக பதவி வகித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கும், முதலீட்டு கொள்கைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
07-ஏப்-202220:51:58 IST Report Abuse
M  Ramachandran ....
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-ஏப்-202214:28:19 IST Report Abuse
pradeesh parthasarathy இந்த உயர் ஜாதி இந்துக்கள் அமெரிக்கா செய்வதற்கு பதிலாக இந்தியாவில் ராணுவத்தில் சேர்ந்து தங்கள் தேச பக்தியை காட்ட முன்வராதது ஏன்? எதற்கு அமெரிக்கா செல்கிறார்கள் ...?
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
03-ஏப்-202209:34:00 IST Report Abuse
Hari என்னமோ போங்க நம்ம லியோனி ,சுபவீ, நாட்டிய உஸ்மான், சுந்தரவல்லி இவர்களின் நியமனத்துக்கும் பைடனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X