மீண்டும் வசுந்தரா ராஜே

Updated : ஏப் 03, 2022 | Added : ஏப் 03, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு 2023 டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே, மோதல் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இந்த முறை யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், அவர்களுக்கு இடையே போட்டி உள்ளது.இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு 2023 டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.



latest tamil news


முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே, மோதல் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இந்த முறை யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், அவர்களுக்கு இடையே போட்டி உள்ளது.

இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என, பா.ஜ.,வும் இப்போதே தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. கடந்த முறை, பா.ஜ., முதல்வராக இருந்தவர் வசுந்தரா ராஜே சிந்தியா. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரான இவர், யார் பேச்சையும் கேட்க மாட்டார். கட்சி தொண்டர்களையும் சந்திப்பதில்லை.

இதனால் பா.ஜ., - காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. இதையடுத்து, பா.ஜ., தலைமை வசுந்தரா மீது கோபத்தில் இருந்தது. இவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என்பது தலைமையின் எண்ணம்.


latest tamil news


ராஜஸ்தானை சேர்ந்தவரும், லோக்சபா சபாநாயகருமான ஓம் பிர்லா அல்லது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தலைமை திட்டமிட்டிருந்தது.ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, பா.ஜ., தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

வசுந்தரா தன் பிறந்த நாளை கொண்டாடினார். அந்நிகழ்ச்சியில், ராஜஸ்தானின் 42 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், பல எம்.பி.,க்கள் பங்கேற்றனர். 'எனக்கு இப்போதும் கட்சியில் ஆதரவு உள்ளது; நான் தான் முதல்வர் வேட்பாளர்' என கட்சி தலைமைக்கு அவர் செய்தி சொல்லியிருப்பதாக கட்சியின் மாநில தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தவிர, வேறொரு செய்தியும் அடிபடுகிறது. வசுந்தரா, சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டாராம். 'இனிமேல் திமிராக நடந்து கொள்ள மாட்டேன். கட்சிக்கும், அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கும்' என, அவர் மோடியிடம் உறுதி அளித்துள்ளாராம்.

இதையடுத்து, பா.ஜ., தலைமை வேறு வழியில்லாமல் வசுந்தராவையே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என முடிவெடுத்துள்ளதாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
04-ஏப்-202214:16:04 IST Report Abuse
raja காங்கிரஸ் இந்தியாவிலும் திருட்டு தில்லுமுல்லு கழகம் தமிழகத்திலிருந்து சுத்தமாக துடைத்து எறியப்படவேண்டும்....அப்போதுதான் இந்தியாவும் தமிழகமும் சுத்தமாகும்....
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202211:58:37 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "களையெடுப்பு: திறமையற்றவர்களை கழற்றிவிடும் பா.ஜ.,: கட்சியை வலுப்படுத்த காய் நகர்த்தல்"...... இப்படியும் ஒரு செய்தி அடிபடுதுங்கோவ்... ஆனா இந்த வசுந்தரா நாற்பது வருசத்துக்கு முன்னேடி எப்படி இருந்திருப்பாங்க... ஹி .... ஹி ..... ஹி ......
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-ஏப்-202209:42:05 IST Report Abuse
duruvasar இது என்ன புது டெரண்டு. கட்சி பேதமின்றி தப்பு செய்தவர்கள் மோடியிடம் போய் இனிமேல் தவறு நடக்காது என்று உறுதிமொழி கொடுப்பதென்பது மோடி என்ன அருள்தந்தையா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X