சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நூலகத் துறைக்கு புத்துயிர் அளியுங்க முதல்வரே!

Updated : ஏப் 03, 2022 | Added : ஏப் 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஆங்கிலத்தில், 'டுடே ரீடர்... டுமாரோ லீடர்' என்பர். நல்ல இசை கேட்டும், நல்ல புத்தகங்களை வாசித்தும் பழகாத சமூகம், வன்முறை எண்ணங்களையே வெளிப்படுத்தும். அப்படித்தான் இன்றைய இளம் தலைமுறையினர் பலர், வன்முறை எண்ணங்களோடு உலாவி வருகின்றனர். நாளிதழ்களில் அன்றாடம் வெளிவரும் பாலியல் வன்கொடுமை செய்திகளே அதற்கு சாட்சி.'ஒரு நுாலகம் திறக்கப்படும் போது, 10 சிறைச்சாலைகள்
library, சிந்தனைக்களம், நூலகம், நூலகத்துறை

ஆங்கிலத்தில், 'டுடே ரீடர்... டுமாரோ லீடர்' என்பர். நல்ல இசை கேட்டும், நல்ல புத்தகங்களை வாசித்தும் பழகாத சமூகம், வன்முறை எண்ணங்களையே வெளிப்படுத்தும். அப்படித்தான் இன்றைய இளம் தலைமுறையினர் பலர், வன்முறை எண்ணங்களோடு உலாவி வருகின்றனர். நாளிதழ்களில் அன்றாடம் வெளிவரும் பாலியல் வன்கொடுமை செய்திகளே அதற்கு சாட்சி.

'ஒரு நுாலகம் திறக்கப்படும் போது, 10 சிறைச்சாலைகள் மூடப்படும்' என்றார், மேலைநாட்டு அறிஞர் விக்டர் ஹியூகோ. நுாலகங்களில் பல ஆண்டுகளை கழித்தவர்கள் தான் கார்ல் மார்க்சும், அம்பேத்கரும். அதனாலேயே, உலகம் அவர்களை அறிஞர்கள் என்று இன்று வரை ஆராதிக்கிறது. அலெக்சாண்டர் முதல் ஆபிரகாம் லிங்கன் வரை, அரசின் தலைமை பதவியில் இருந்த பலரும், புத்தகங்கள் வாசிப்பதில் அளவற்ற ஈடுபாடு கொண்டவர்களே.

ஆனால், தற்போதுள்ள தமிழக அரசு நுாலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தான் வேதனையான விஷயம். தமிழகத்தில், 32 மாவட்ட மைய நுாலகங்கள், 1,926 கிளை நுாலகங்கள், 14 நடமாடும் நுாலகங்கள், 1,915 ஊர்ப்புற நுாலகங்கள், 745 பகுதி நேர நுாலகங்கள் உட்பட மொத்தம் 4,634 நுாலகங்கள் உள்ளன. இவை, தமிழக அரசின் பொது நுாலகத்துறை இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நுாலகங்களில், கன்னிமாரா பொது நுாலகமும், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட அண்ணா நுாற்றாண்டு நுாலகமும் தனிச் சிறப்பானவை.தமிழகத்தில் ஆயிரக்கணக்கான நுாலகங்கள் இருப்பது போலவே, நுாற்றுக்கணக்கான பதிப்பகங்களும் உள்ளன. இவை அனைத்தும், அரசின் பொது நுாலக துறையானது, தங்களிடம் புத்தகங்களை வாங்கி, நுாலகங்களில் வாசகர்கள் வாசிக்க வைக்கும் என்ற கோணத்திலேயே ஏராளமான நுால்களை அச்சிடுகின்றன.

பகுதி நேர நுாலகங்கள் மற்றும் நடமாடும் நுாலகங்களை தவிர்த்துக் கணக்கிட்டாலும், ஒவ்வொரு புத்தகமும், 3,875 பிரதிகள் அளவுக்கு, அரசால் பணம் கொடுத்து வாங்கப்பட்டு, நுாலகங்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டும். இந்த நுால்களை வாங்க, அரசு தன் கஜானாவில் இருந்து காலணா எடுத்து கொடுக்கத் தேவையில்லை.

மக்கள் கட்டும் வீட்டு வரி, சொத்து வரி போன்றவற்றிலேயே, நுாலகங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை வசூலிக்கப்படுகிறது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து தான், புத்தகங்கள் வாங்க பதிப்பகங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.3,000 பிரதிகள்


பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை, தமிழக அரசின் நுாலகத்துறை, குறைந்த பட்சம் தலா 3,000 பிரதிகளாவது வாங்கி, அவற்றை கிளை நுாலகங்களுக்கும், ஊர்ப்புற நுாலகங்களுக்கும் வினியோகித்தால், அந்த நுால்கள் வாசகர்களையும் எட்டும்; பதிப்பகங்களும் பிழைக்கும். அச்சிட்டு கொடுக்கும் அச்சகங்களும் பிழைக்கும்.ஆனால், தமிழக அரசின் பொது நுாலகத்துறை, எந்த புத்தகத்தையும், 1,000 பிரதிகள் கூட வாங்குவதாக தெரியவில்லை. அதனால், பதிப்பகங்களும், எந்த புத்தகத்தையும் அதிகபட்சம், 1,500 பிரதிகளுக்கு மேல் அச்சிடுவது இல்லை.


latest tamil newsசில உஷாரான பதிப்பகங்கள், 1,500 பிரதிகளை கூட அச்சிடாமல், வெறுமனே 50 பிரதிகளை மட்டும் அச்சிட்டு, அதில் ஐந்து அல்லது 10 புத்தகங்களை, நுாலகத்துறைக்கு அனுப்பி வைக்கின்றன. அந்த புத்தகத்தை நுாலகத்துறை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, மீதி புத்தகங்களை அச்சிட ஆரம்பிக்கின்றன. இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால் பாதிக்கப்படுவது, அப்பாவி எழுத்தாளர்களே.

இப்படி நுாலகங்களுக்கு புத்தகங்களே வாங்காமல், மூடு விழா நடத்த உத்தேசித்திருக்கும் தமிழக அரசு, ஆரம்ப நாட்களில், பத்திரிகைகளின் வாயிலாகவே தங்கள் கட்சி கொள்கைகளை பட்டி தொட்டியெங்கும் பரப்பியது, அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

'உதய சூரியன் படிப்பகம், கலைஞர் படிப்பகம்' என்ற பெயர்களில், ஒவ்வொரு வார்டிலும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அதில், கட்சி முன்னோடிகளின் படங்களை மாட்டி வைத்து, கட்சிப் பத்திரிகைகளை அங்கு பரப்பி வைத்து, அங்கு வரும் வாசகர்களை வாசிக்க வைத்தே, கட்சிக் கொள்கைகளை பட்டி தொட்டியெங்கும் பரப்பின.நுாலகர்கள் பற்றாக்குறை


ஆனால், இன்று எத்தனை பள்ளிகளில் நுாலகங்கள் உள்ளன? எத்தனை பள்ளி நுாலகங்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்? வாரத்தில் ஒரு மணி நேரமாவது, மாணவர்கள் நுாலகங்களுக்கு சென்று, புத்தகங்களை படிக்கின்றனரா என்று கேட்டால், இல்லை என்றே பதில் தரும். தமிழகத்தில், நுாலகத் துறை என்றாலே, ஆட்சியாளர்களுக்கு கசப்பாகத் தான் உள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான், அதைப் பார்க்கின்றனர்.

நுாலகம் என்பது தனித் துறையாக இயங்குவதே இல்லை. கடலளவு சிக்கல்களில் மிதக்கும் பள்ளிக்கல்வி துறையின் மேற்பார்வையிலேயே, நுாலகங்கள் செயல்பட வேண்டிய அவலம் தொடர்கிறது. மாவட்ட நுாலகங்களில் நுாலகர்கள் பற்றாக்குறை உள்ளது. இரண்டு, மூன்று மாவட்ட நுாலகங்களுக்கு ஒரு நுாலகர் என்ற நிலை தான் நிலவுகிறது. அதிலும், இப்போது புதிதாக பல மாவட்டங்கள் உருவாகியுள்ளன. அங்கெல்லாம் மாவட்ட நுாலகங்கள் துவக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மாவட்ட மைய நுாலகங்களின் தலைவர்கள், தங்கள் அளவில் ஆர்வமுள்ளவராக இருந்தால், பல்வேறு நிகழ்வுகளின் வாயிலாக, நுாலகங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்த முடியும். மாவட்டங்கள் தோறும் இரண்டு, மூன்று நடமாடும் நுாலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.தமிழக அரசும் புதிய திட்டங்களை தீட்டி, நுாலக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நுாலகங்களை நன்கு பராமரிக்கலாம்.ஸ்டாலின் அரசு, இதற்கென சில கோடிகளை, யோசிக்காமல் ஒதுக்க வேண்டும்.

நுாலகங்கள் இல்லாத ஊர்களில், நுாலகங்களை ஏற்படுத்த வேண்டும். 'டிஜிட்டல்' உலகின் திறன் கொண்டு, நுாலகங்களில் புதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.நுாலகங்களுக்கு உயிர், புத்தகங்கள் தானே! அவற்றை வாங்குவதில் சிக்கனம் காட்டாமல், புதிது புதிதாக வாங்கி பல்வேறு துறையினரின் அறிவுப் பசியை தணிக்க வேண்டும். புத்தகங்களை வாங்கிக் குவிக்க வேண்டியது, ஒரு நல்ல அரசின் கடமை. ஆனால் தற்போது, நுாலகங்களுக்கு புத்தகங்களும், பத்திரிகைகளும் வாங்குவதில், ஒரு நியாயமான பார்வை இல்லை. அதாவது, நுாலகங்களுக்கு வாங்கப்படும் பத்திரிகைகளின் எண்ணிக்கை, திடீரென சகட்டு மேனிக்கு கூட்டப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது.

சந்தையில் காகிதத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த மாதம் முதல், அச்சு மற்றும் பதிப்பு வேலைக்கான கட்டணம், 40 சதவீதம் உயர்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொது நுாலகத் துறை, பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களிடம் பத்திரிகையின் விலையில் சலுகை தர வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. பொது நுாலகத் துறையில் முன்பெல்லாம், மாவட்ட நுாலகர்கள் பொறுப்பில் தான் பத்திரிகைகள் வாங்கப்பட்டன. அந்தக் காலமே நல்ல காலம் என்று எண்ணும்படி தற்போதைய நிலைமை உள்ளது.புத்தகம் படிக்கும் பழக்கம்


காரணம், நுாலகங்களுக்கான புத்தகங்கள் பத்திரிகைகள் வாங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு, பத்திரிகையாளர்களின் கழுத்தை நெரிக்கும் புண்ணிய காரியத்தை தான், திறம்பட செய்ய துவங்கி இருக்கிறது. இது அநியாயம். அறிவார்ந்த சமூகத்தின் நாற்றாங்காலில் நச்சு நீர் பாய்ச்சலாமா? முதல்வர் உடனடியாக இதை தன் பரிசீலனைக்கு உட்படுத்தி, நுாலகங்களுக்கான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் தேர்வில், அவற்றை வாங்குவதிலும், அதற்கான சிறப்பு குழுவினர் செய்துள்ள குளறுபடிகளையும், கோளாறுகளையும் களைந்து, பத்திரிகைகளுக்கு ஆதரவளிப்பதுடன், நுாலகத் துறைக்கும் புத்துயிர் அளிக்க வேண்டும்.

இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும், நுாலகங்களுக்கு சென்று படித்ததாலேயே பல அறிஞர்கள் உருவாகினர் என்பது, மறுக்க முடியாத உண்மை. அதனால், நுாலகம் என்பது ஒரு இயக்கமாக்கப்பட வேண்டும். அரசின் கடமைகளில், அதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். நுாலகங்களை தேடிச் சென்று, புத்தகம் படிக்கும் பழக்கத்தை, பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.


latest tamil news


எஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்
இ - மெயில்:essorres@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
03-ஏப்-202222:52:21 IST Report Abuse
Mohan வேணும்னா நூலகம் இன்னும் 1000 கூட கட்டுவோம். அப்போதான் நாங்க கட்ட முடியும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202212:04:59 IST Report Abuse
Kasimani Baskaran நல்ல புத்தகங்களை படித்தால் நிச்சயம் முன்னேறலாம். அடிமைப்படுத்தும் புத்தகங்களை படித்தால் திமுகவில் சேரலாம்.
Rate this:
Cancel
03-ஏப்-202211:15:33 IST Report Abuse
ஆரூர் ரங் மதுரையில் புதிய நூலகமாம் ....பரவாயில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X