வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மசூதிகளில் அதிக சப்தத்துடன் ஒலிபெருக்கிகள் ஒலிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய மஹாராஷ்டிர நவநிர்மாண சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிடில் மசூதிகள் முன்பு அனுமன் பாடல்கள் ஒலிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர நவநிர்மாண சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சப்தத்துடன் ஒலிக்கப்படுகின்றன. இதை மஹாராஷ்டிர அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நான் பிரார்த்தனை அல்லது தொழுகைக்கு எதிரானவன் அல்ல. நீங்கள் உங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யலாம். மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கி வைக்கப்பட்டு அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்.

மசூதிகளில் சோதனை மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகிறேன். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வசித்து வரும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும். எம்எல்ஏ.,க்களுக்கு எதற்கு வீடுகள் வழங்க வேண்டும்? குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீடு வழங்கலாம். எம்எல்ஏ.,க்களுக்கு வீடுகள் வழங்குவதென்றால், அவர்களின் பண்ணை வீடுகளை பறித்துவிட்டு வீடுகள் வழங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE