உ.பி., சாமியார் மீண்டும் சர்ச்சை

Updated : ஏப் 03, 2022 | Added : ஏப் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி:''இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்றால், 50 சதவீத ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டு விடுவர்,'' என, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, சர்ச்சைக்குரிய சாமியார் யதி நரசிங்கானந்த் கூறினார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காஜியாபாதில் உள்ள தஸ்னா தேவி கோவில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் யதி

புதுடில்லி:''இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்றால், 50 சதவீத ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டு விடுவர்,'' என, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, சர்ச்சைக்குரிய சாமியார் யதி நரசிங்கானந்த் கூறினார்.latest tamil newsஉ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காஜியாபாதில் உள்ள தஸ்னா தேவி கோவில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் யதி
நரசிங்கானந்த்.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த ஆண்டு டிசம்பரில், 'தர்ம சன்சத்' என்ற பெயரில் மாநாடு நடந்தது. இதில் நரசிங்கானந்த், சிறுபான்மையினருக்கு எதிராக,

ஹிந்துக்களை துாண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்

நிலையில், டில்லியின் புராரி பகுதியில் 'ஹிந்து மஹா பஞ்சாயத்து' மாநாடு நடந்தது.


latest tamil newsஇதில் யதி நரசிங்கானந்த் பேசியதாவது:வரும் 2029 அல்லது 2034 அல்லது 2039ல் முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், 50 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு கட்டாயம் மதமாற்றம் செய்யப்படுவர். 40சதவீத ஹிந்துக்கள் கொல்லப்படுவர். 10 சதவீத ஹிந்துக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பர்.இல்லாவிடில் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பர். இது நடக்கக் கூடாது என்றால், ஹிந்துக்கள் அனைவரும் கையில் ஆயுதம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நரசிங்கானந்தின் பேச்சு அடங்கிய 'வீடியோ'சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alvarkadiyan - Sydney,ஆஸ்திரேலியா
04-ஏப்-202203:31:43 IST Report Abuse
Alvarkadiyan பாகிஸ்தானில் ஒரு சதவிகிதம் இந்துக்கள் இல்லை. பங்களாதேஷில் பத்து சதவிகிதம் இல்லை. It is a possibility may the time frame is a bit iffy.
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
04-ஏப்-202202:33:56 IST Report Abuse
mei உண்மையை தான் சொல்லியிருக்கிறார். இந்துக்கள் தான் இன்னும் தூக்க கலக்கத்திலேயே உள்ளனர்
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
04-ஏப்-202200:39:36 IST Report Abuse
Manguni சிறுபான்மை வோட்டு வேண்டும் என்று எதுவும் செய்யும் திராவிஸ கட்சிகளை யாரும் தட்டி கேட்க மாட்டீர்கள். இப்போது சீறிக்கொண்டு வந்து விடுவீர்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X