எக்ஸ்குளுசிவ் செய்தி

பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்ட தி.மு.க., முடிவு?

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 03, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
தி.மு.க., அலுவலக திறப்பு விழாவிற்காக டில்லி வந்த, தமிழக அமைச்சர்கள் சிலர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி, குதுாகலத்துடன் சென்னை திரும்பியுள்ளனர். 'பா.ஜ.,வுடன் உரசல் போக்கு வேண்டாம்; நெருக்கம் காட்டுவோம்' என, முதல்வர் ஸ்டாலினிடம் வெளிப்படையாக தெரிவித்து உள்ளனர். வளர்ச்சி திட்டம் டில்லியில், தி.மு.க., அலுவலகமான, 'அண்ணா - கலைஞர் அறிவாலயம்' திறப்பு விழா, நேற்று
பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்ட தி.மு.க., முடிவு?

தி.மு.க., அலுவலக திறப்பு விழாவிற்காக டில்லி வந்த, தமிழக அமைச்சர்கள் சிலர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி, குதுாகலத்துடன் சென்னை திரும்பியுள்ளனர். 'பா.ஜ.,வுடன் உரசல் போக்கு வேண்டாம்; நெருக்கம் காட்டுவோம்' என, முதல்வர் ஸ்டாலினிடம் வெளிப்படையாக தெரிவித்து உள்ளனர்.வளர்ச்சி திட்டம்டில்லியில், தி.மு.க., அலுவலகமான, 'அண்ணா - கலைஞர் அறிவாலயம்' திறப்பு விழா, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தியாகராஜன், சுப்பிரமணியன் உட்பட எட்டு அமைச்சர்கள், டில்லியில் முகாமிட்டுஇருந்தனர்.

அப்போது, தி.மு.க., அமைச்சர்கள் சிலரை, அவர்களின் துறையை சேர்ந்த மத்திய அமைச்சர்களிடம், முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி பேச வைத்தார். மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து தெரிவித்த அமைச்சர்கள், தமிழக நலன் சார்ந்த பல கோரிக்கைகளை, மத்திய அமைச்சர்களிடம் முன் வைத்தனர்.


கோரிக்கைதங்களை சந்திக்க வந்த தி.மு.க., அமைச்சர்களை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ்கோயல் போன்றவர்கள், இன்முகத்துடன் வரவேற்று, துறை ரீதியான கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். மத்திய அமைச்சர்களின் தனிப்பட்ட மொபைல் போன் எண்களை, தி.மு.க., அமைச்சர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில், அவர்களின் சந்திப்பும், உரையாடலும் உற்சாகமாக அமைந்தது.

அறிவாலயம் திறப்பு விழா முடிந்து, 2ம் தேதி இரவு மூன்று விமானங்களில், டில்லியில் இருந்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்னைக்கு குதுாகலத்துடன் திரும்பினர். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சர்கள் அனைவரும், 'பா.ஜ.,விடம் தி.மு.க., நெருக்கமாக இருக்க வேண்டும்; உரசல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்' என்ற ஒருமித்த குரலில் தெரிவித்துஉள்ளனர். அவர்களின் கருத்தில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளதால், அதை ஏற்கும் நிலைக்கு ஸ்டாலின் வந்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழ், ஹிந்தியில் போஸ்டர்கள்

*டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு பணிக்காக, தமிழக காவல் துறையில் இருந்து 40 பேர், டில்லிக்கு ரயிலில் அழைத்து வரப்பட்டனர். தலைமை செயலர் உள்ளிட்ட எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், அறிவாலயம் திறப்பு விழாவிற்கு முதல் நாள் இரவு சென்னை திரும்பி விட்டனர்

* டில்லியில் முக்கிய இடங்களில், முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் டில்லியை ஒரு கலக்கு கலக்கி விட்டனர் தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், 120 தனியார் வாகனங்கள் முன்பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்கள் அனைத்தும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டன

* விருந்தினர் மாளிகையில் உள்ள தனியார் ஹோட்டலில், 10 அறைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதில், முதல்வர் ஸ்டாலினுடன் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கினர். தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி வீட்டில், மூன்று பெண் எம்.பி.,க்கள் தங்கியிருந்தனர்

* டில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு அணிவிக்க, 450 சால்வைகள், 300 தஞ்சாவூர் தட்டுக்கள் போன்ற பரிசு பொருட்கள், தமிழகத்தில் இருந்து லாரியில் டில்லிக்கு வந்தன. சோனியாவுக்கு, ஸ்டாலின் கையெழுத்திட்ட பரிசு வழங்கப்பட்டது.
- புதுடில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan K Y - Chennai,இந்தியா
04-ஏப்-202218:12:23 IST Report Abuse
Karthikeyan K Y இதுவரை திமுக மீது எந்த வித நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை பார்த்தாலே தெரியவில்லையா அன்று அதிமுக இன்று திமுக. மக்களும் வோட்டுக்கு பணம் வாங்கி வோட்டு போடும் வரை திருந்த போவதில்லை இந்த ஊழலில் திளைத்த கூட்டத்தை ஒழிக்க முடியாது முடிந்தால் அவரவர்கள் சொத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் ஊராட்சி தேர்தல் முடிந்த கையேடு கட்டப்பஞ்சாயத் தலைவர்களும் குழுக்களும் நியமனம் நடந்து கொண்டு இருக்கிறது ஜாக்கிரதை
Rate this:
Cancel
Karunan - udumalpet,இந்தியா
04-ஏப்-202217:40:44 IST Report Abuse
Karunan நெருக்கம் அல்ல.பாசாங்கு ..பிஜேபி புரிந்துகொண்டால் சரி...க ட் காரிகள் இணங்குவார்கள் ..எல்லோரும் இணங்கு வார்களா தெரிய வில்லை
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
04-ஏப்-202217:07:21 IST Report Abuse
G.Prabakaran நெருக்கம் காட்டினால் தானே முந்திய அண்ணாதிமுக அரசை போல் கொள்ளை அடித்தாலும் தற்காத்துக் கொள்ள முடியும் ஆகவே தான் அமைச்சர்கள் எல்லோரும் இப்போதே துண்டு போட்டு நெருக்கம் காட்டுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X