இலங்கையின் நிலை இந்தியாவில் ஏற்படும்: பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கருத்து

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | கருத்துகள் (102) | |
Advertisement
புதுடில்லி : பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு உள்ள ஜனரஞ்சகமான நலத்திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி உருவாகும் என, பிரதமர் நரேந்திர மோடி உடனான கூட்டத்தில் பல்வேறு துறை செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
PM Modi, Narendra Modi, Economic Crisis

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு உள்ள ஜனரஞ்சகமான நலத்திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி உருவாகும் என, பிரதமர் நரேந்திர மோடி உடனான கூட்டத்தில் பல்வேறு துறை செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news


அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன் எடுக்காததற்கு வறுமையை காரணமாக கூறும் பழங்கதையை கைவிட்டு, புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி, அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 'சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த மாநிலம் உட்பட, பல்வேறு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஜனரஞ்சகமான சில திட்டங்கள், பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை.'இந்த திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது' என, செயலர்கள், பிரதமரிடம் வெளிப்படையாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202205:02:48 IST Report Abuse
Mahesh மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கு உச்சவரம்பு வைத்து சட்டம் இயற்ற வேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஏப்-202203:59:43 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாடு பற்றித்தான் கவலை. அடுத்த இலங்கை, தமிழ்நாடு.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-ஏப்-202217:51:54 IST Report Abuse
Visu Iyerஇலங்கையில் தங்கம் ஒரு சவரன் 2 லட்சம்... இந்தியாவில் 30 ஆயிரம் தான் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்று சொல்லிட போறாங்க....
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
08-ஏப்-202207:36:38 IST Report Abuse
sankar லங்காவில் குடும்ப ஆட்சி நடத்தி சீனாவிடம் பெரும் பணம் கடனாக வாங்கி யாருக்கும் பிரயோஜனம் இல்லாத ப்ரொஜெக்ட்ஸ் தொடக்கி தங்களுக்கான கமிஷன் வாங்கிக்கொண்டு அதை வெளிநாடுகளில் உள்ள பாங்கில் வைத்துவிட்டு சீனாவிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கடடமுடியாமல் ஏர்போர்ட் துறைமுகம் எல்லாம் அடமானம் செய்து அந்நிய செலாவணி இல்லாமல் மறைமுகமாக இந்தியாவிட்கு எதிராக பல திள்லங்கடி வேலைகள் செய்து திண்டாடி எல்லாரையும் தெருவில் நிற்கவைத்துவிடடார்கள் இந்த குடும்ப ஆட்சியாளர்கள் ஆகவே ஆகவே மோடிஜியும் குடும்ப ஆட்சியை வேண்டாம் என்கிறார்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-ஏப்-202217:51:32 IST Report Abuse
Visu Iyerஅப்படின்னா பாஜகவை கலைத்து விட சொல்றீங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X