'ரம்ஜான் நோன்பு இருப்பதால் உடலும் மனமும் தூய்மையாகும்'

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் நேற்று ரம்ஜான் நோன்பு துவங்கியது. இஸ்லாமிய சகோதரர்களின் ஐந்து பெரும் கடமைகளில் நோன்பு இருத்தல் முக்கியமான கடமையாகும். சூரியன் தோன்றுவதற்கு முன்பாக உணவு உட்கொண்டு விட்டு, பகல் முழுவதும்தண்ணீர் கூட குடிக்காமல், 30 நாட்கள் நோன்பு இருப்பது, ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும். நோன்பு நாட்களின் பலன்கள் மற்றும் சிறப்பு குறித்து மூத்த இஸ்லாமியர் சிலர்


கோவை:கோவையில் நேற்று ரம்ஜான் நோன்பு துவங்கியது. இஸ்லாமிய சகோதரர்களின் ஐந்து பெரும் கடமைகளில் நோன்பு இருத்தல் முக்கியமான கடமையாகும். சூரியன் தோன்றுவதற்கு முன்பாக உணவு உட்கொண்டு விட்டு, பகல் முழுவதும்தண்ணீர் கூட குடிக்காமல், 30 நாட்கள் நோன்பு இருப்பது, ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும். நோன்பு நாட்களின் பலன்கள் மற்றும் சிறப்பு குறித்து மூத்த இஸ்லாமியர் சிலர் கூறியதாவது:



latest tamil news



உமர், கோவை: ஏழு வயதிலிருந்து கடந்த, 50 ஆண்டுகளாக நோன்பு இருந்து வருகிறேன். நோன்பு நாட்களில் மனம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது.கோபம், வெறுப்பு, சங்கடங்கள் இருப்பதில்லை. கஷ்டங்கள் இருந்தாலும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது. தொடர்ந்து நோன்பு இருப்பவர்களுக்கு, இறைவனின் பூரண அருள் கிடைக்கும்.
சையத் அபுதாகிர்: கோவை கடந்த, 29 ஆண்டுகளாக நோன்பு கடைபிடித்து வருகிறேன். நோன்பின் முக்கிய நோக்கம், இறைவனுக்கு அஞ்சி இருப்பதாகும். இறைவனின் போதனைகளை கடைபிடித்து நடப்பதாகும். நோன்பு நாட்களில் பசியை முழுமையாக உணர முடிகிறது. தவறு செய்யும் எண்ணம் மனதில் தோன்றுவதில்லை. முக்கியமாக, அன்பும், மனித நேயமும் வளரும்.


latest tamil news




சலீம், கரும்புக்கடை: நான் கடந்த, 37 ஆண்டுகளாக நோன்பு இருந்து வருகிறேன். நோன்பு காலத்தில் இறைவனுக்கும் நமக்கும் தனியாக தொடர்பு ஏற்படுகிறது. இறைவனின் நேரடி பார்வையில் இருக்கிறோம்.எந்த தவறும், குற்றமும் செய்ய தோன்றாது. பொறுமை, தன்னடக்கம், நல்ல சிந்தனைகள் ஏற்படும். நோன்பு இருக்கும் நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
ரஹீம், பள்ளி இமாம், போத்தனுார்: நான் கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக நோன்பு இருந்து வருகிறேன். இதனால், இரக்க குணம், பிறருக்கு உதவும் எண்ணம், புலன் அடக்கம், ஒழுக்க சிந்தனை ஏற்படுகிறது. இறைவனின் அருளை முழுமையாக பெற, நோன்பு இருப்பதுதான் சிறந்த வழி. நோன்பு நாட்களில் உடலும், மனமும் துாய்மை அடைகிறது. இதனால் நான் வாழும் காலம் முழுவதும் நோன்பு கடைபிடிப்பேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X