சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதில் சிக்கல்; குளறுபடிகளை அரசு தவிர்ப்பது அவசியம்

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை : தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் போது அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி தான் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிரதான வருவாய். இதில் சரியான முடிவை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய காலத்தில் எடுக்காததால் பல ஆண்டுகளாக சொத்து வரி
property tax, TN govt, DMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் போது அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி தான் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிரதான வருவாய். இதில் சரியான முடிவை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய காலத்தில் எடுக்காததால் பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. அதனால் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டது.உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2018 ஜூலை 19ல் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்; வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி அரசு உத்தரவிட்டது.

அப்போது இந்த உயர்வு விகிதங்களை காட்டிலும் அதை அமல்படுத்துவதில் அதிகாரிகள் செயல்பட்ட விதம் தான் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் அன்றைய அ.தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக 2019ல் அறிவித்தது.சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சொத்து வரி உயர்வில் அமைதி காத்து வந்த அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இதுதான் சரியான நேரம் என்று சொத்து வரியை 1௦0 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.


latest tamil news





குளறுபடி தடுக்கப்படுமா


அ.தி.மு.க. ஆட்சியின் போது சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதில் அதிகாரிகள் பெரிய அளவில் குளறுபடி செய்தனர்.ஒரு வீட்டுக்கு 1000 ரூபாய் சொத்து வரி என்றால் 50 சதவீத உயர்வுடன் 1500 ரூபாய் செலுத்த வேண்டி வரும். ஆனால் வீட்டுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் வரி நிர்ணயம் செய்தது தவறு என்று கூறி அதை 1500 ரூபாயாக நிர்ணயித்து அதில் இருந்து 50 சதவீத உயர்வு என்றனர். இதனால் 1000 ரூபாய் செலுத்திய நபர் 2250 ரூபாய் செலுத்தும் நிலை ஏற்பட்டது.

இந்த குளறுபடிகளால் தான் சொத்து வரி உயர்வை முந்தைய ஆட்சியில் அமல்படுத்த முடியவில்லை. தற்போதும் அதுபோன்ற குளறுபடிகள் நடக்குமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ஏற்கனவே வசூலிக்கப்படும் சொத்து வரி அடிப்படையில் தான் வரி உயர்வு கணக்கிடப்படும் என அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



துல்லிய மதிப்பீடு


இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:சொத்து வரி விதிப்புக்காக ஒவ்வொரு கட்டடத்தையும் ஆய்வு செய்ய வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் பணி. பெரும்பாலான உள்ளாட்சிகள் இன்னும் முழுமையான ஆய்வை முடிக்காமல் உள்ளன. புதிய மாநகராட்சிகள் நகராட்சி பகுதிகளில் 100 வீடுகளில் 70 வீடுகளுக்கு மட்டுமே சொத்து வரி மதிப்பிடப் பட்டுள்ளது.

இதிலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் குறைந்த பரப்பளவுக்கு பல இடங்களில் மதிப்பீடு செய்து கொடுப்பது தொடர்கிறது. நிர்வாக நிலையில் இது போன்ற குளறுபடிகளை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பாதாள சாக்கடை வசதிகள் சீரான குடிநீர் விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும் சொத்து வரி உயர்வு அடிப்படையில் அதனுடன் வசூலிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை கட்டணங்கள் உயருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
04-ஏப்-202215:44:06 IST Report Abuse
Narayanan சொத்துவரி உயர்த்தமாட்டோம் எனப்து திமுகவின் தேர்தல் நேர வாக்குறுதி . பலவாக்குருதிகள் காற்றில் விட்ட மாதிரி இதுவும் பறந்துவிட்டது
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
04-ஏப்-202214:30:16 IST Report Abuse
KavikumarRam தீயமுகாவுக்கு ஒட்டு போட்டவன் எல்லாம் நாக்கை புடுங்கிட்டு சாகுங்கப்பா.
Rate this:
Cancel
Victor Christopher - sanaa,ஏமன்
04-ஏப்-202213:10:51 IST Report Abuse
Victor Christopher தண்ணி , ரோடு , பாதாள சாக்கடை பிறகு வரி பொடுக தயவு செய்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X