இட்லி, தோசை, பிரியாணி, டீ விலையை 20 சதவீதம் உயர்த்த ஹோட்டல்கள் முடிவு

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளின் விலையை, 20 சதவீதம் வரை உயர்த்த, ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, சமீபத்தில் 268 ரூபாய் உயர்ந்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஹோட்டல்கள் நடத்துவோருக்கு செலவு அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலையை உயர்த்த
Hotel, Food, Price Hike

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளின் விலையை, 20 சதவீதம் வரை உயர்த்த, ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, சமீபத்தில் 268 ரூபாய் உயர்ந்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஹோட்டல்கள் நடத்துவோருக்கு செலவு அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


ஹோட்டல்களில் இட்லி, தோசை, விலை உயருகிறது

latest tamil news



இது தொடர்பாக, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஹோட்டல் நடத்துவது மிகவும் சிரமமாகி விட்டது. தற்போதைய சூழலில், ஹோட்டல்களில் உணவு பொருட்கள் விலையை, 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் குறித்து விவாதிக்க, ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம், வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், உணவு பொருட்கள் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கிள் டீ விலை 2 ரூபாய்; காபி விலை 3 ரூபாய்; இட்லி, பூரி, பொங்கல் போன்றவற்றின் விலை 5 ரூபாய்; தோசை, புரோட்டா விலை 10 ரூபாய்; சாப்பாடு, பிரியாணி விலை 20 ரூபாய் வரையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-202219:46:14 IST Report Abuse
ராஜா வீட்டில் தயார் செய்து சாப்பிட ஆரம்பித்தால் ஓட்டல்கார் காசை குறைத்து கெஞ்சி கூப்பிடுவார். ஆனால் அது நடக்காது. சென்னையில் பல குடும்பங்கள் சோத்துக்கு நம்பியிருப்பது ஓட்டல்களையே.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
04-ஏப்-202218:25:16 IST Report Abuse
சீனி வேலைக்கு செல்பவர்கள் தரமான உணவு குறைந்த விலையில் தினமும் கிடைத்தால் தான், ஆரோக்கியமாக வேலைசெய்வார்கள், திடகார்த்திரமான உழைப்பாளிகள் கிடைத்தால் எல்லா தொழிலும் பெருகும், உணவுத்தேவை காரணமாக விவசாயம் சார்ந்த தொழில்களும் பெருகும், இதனால் உற்பத்தியும், வரி வருமானமும் உயரும். இதெல்லாம் பொருளாதாரத்துக்கு அடிப்படை, ஆனா விபரமில்லாத திராவிட டாஸ்மாக் கொள்கை, டக்ளஸ் வளைகாப்பு கொள்கை காரணமாக, டாஸ்மாக் மூலம் வாரிசுகளின் பொருளாதாரம் மட்டுமே தொடர்ந்து பெருகுது, மால் கட்ட மக்கள் காசில் டுப்பாக்கூர் பயணம் மேற்கொள்கின்றனர், ஆனா உழைக்கவேண்டிய மக்கள் நோஞ்சானாக கட்டிங் போட்டுவிட்டு வேலைக்கு செல்லாமல், இலவசத்துக்கு பையை தூக்கிகொண்டு ரேசன் ரேசனாக அலைந்து கொண்டிருக்கவேண்டும். ஹாங்காங், சிங்கப்பூர், பாங்காக், கோலாலம்பூர், டில்லி, மும்பை உட்பட உலகின் வளர்ச்சியடைந்த பெரிய நகரங்களில்,அடித்தள மக்கள் சம்பாதிக்கும் காசுக்கு தகுந்த மாதிரி அடிப்படையான உணவு குறைந்த விலையில் தரமாக கிடைக்கும், அதனால் உழைக்கும் வர்க்கம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வேலை செய்வார்கள், இது தான் பொருளாதார வளர்சிக்கு அடிப்படை, இதெல்லாம் நம் திராவிட மண்டைகளுக்கு புரியவைப்பது கடினம்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
04-ஏப்-202216:53:53 IST Report Abuse
R S BALA எல்லாரும் எல்லாத்தயும் தேவையான அளவு விலைய ஏத்தி கேப்ப சரி பண்ணிகிறானுவோ .. நம்ம வருமானம் அப்படியே கிடக்குதே தெய்வமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X