வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: “மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல,” என, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறியுள்ளதாவது: அரசில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடும் போது விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமம் என்னவென்பது எனக்கு தெரியும். கடந்த 2013ல் நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, 'சி.பி.ஐ., கூண்டுக்கிளி' என உச்ச நீதிமன்றமே விமர்சனம் செய்திருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. நரேந்திர மோடி நம் பிரதமராக பதவி வகிக்கிறார். சி.பி.ஐ., இப்போது சுதந்திரமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'சி.பி.ஐ.,யின் நம்பகத்தன்மை பொது ஆய்வுக்கு உட்பட்டது. விசாரணை அமைப்புகள் அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்' என கூறியிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE