கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லையாம்: உத்தரவை திரும்ப பெற்றது தமிழக அரசு

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, தமிழக பொது சுகாதாரத்துறை திரும்ப பெற்றுள்ளது.தமிழகத்தில், 2020 மார்ச்சில் கொரோனா தொற்றின் முதல் அலை பரவத் துவங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையையும் தமிழகம் எதிர்கொண்டது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு
Covid Vaccine, Mandatory, TNGovt, தமிழக அரசு, கொரோனா, தடுப்பூசி, கட்டாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, தமிழக பொது சுகாதாரத்துறை திரும்ப பெற்றுள்ளது.



தமிழகத்தில், 2020 மார்ச்சில் கொரோனா தொற்றின் முதல் அலை பரவத் துவங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையையும் தமிழகம் எதிர்கொண்டது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டது. மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியை, பொதுமக்கள் அதிகம் போட வசதியாக, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டன.



பொது இடங்களுக்கு செல்பவர்கள், தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 92 சதவீதம் பேர் முதல் டோஸ்; 75 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர்.தற்போது, நாடு முழுதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.



latest tamil news


இதையடுத்து, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, தமிழக பொது சுகாதாரத்துறை திரும்ப பெற்றுள்ளது. அதேநேரத்தில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும்படி, அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
04-ஏப்-202217:02:06 IST Report Abuse
Ramasamy தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு தேவைக்கு அதிகமான லாபங்கள் கிடைத்து விட்டது. மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையான கமிசனும் கிடைத்துவிட்டது. அதனால் இந்த தேவையில்லாத தடுப்பூசியை தேவையில்லை என சொல்லிவிட்டார்கள்.
Rate this:
Cancel
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
04-ஏப்-202216:54:58 IST Report Abuse
Ramasamy தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு தேவையான வேண்டிய லாபங்கள் வந்துவிட்டது. மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு தேவையான கமிசனும் வந்து விட்டது. எனவே இந்த தேவையே இல்லாத தடுப்பூசியை தேவையில்லை என சொல்லிவிட்டார்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
04-ஏப்-202214:22:15 IST Report Abuse
அசோக்ராஜ் துருக்கப் பண்டிகைக் காலம் தொடங்கிடுச்சு டோய் ... இனிமே கண்ட்ரோலாவது பாதுகாப்பாவது? ஃபுல் ஃப்ரீடம் ஃப்ரம் ஃபோர்ஸ். இரவில் சாலைகளை டைனிங் ஹாலாக மாற்றலாம். தின்று குடித்து பின் கூட்டமாக நகர்வலம் வரலாம். கோஷம் எழுப்பலாம். த்ராவிஷம் வெல்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X