ஐதராபாத்தில் போதை விருந்து; பிரபல நடிகரின் மகள் உட்பட 148 பேர் கைது

Updated : ஏப் 04, 2022 | Added : ஏப் 04, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு
Celebrities, Politicians, Drug Party, Hyderabad Police, Raid, Arrest, Niharika Konidela

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.



திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் பப்பில் நேற்று (ஏப்ரல் 3) அதிகாலையில் நடந்த பார்ட்டியில் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



latest tamil news


இதையடுத்து அந்த ஹோட்டலில் திடீரென சோதனை மேற்கொண்ட போலீசாரின் வலையில் நடிகர்களின் வாரிசுகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், முக்கிய வி.ஐ.பி.,க்கள் என பலரும் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகர் நாகபாபுவின் மகளுமான நிஹாரிகா கொனிடேலா, பின்னணி பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் எம்பி.,யின் மகன் உட்பட 148 பேர் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், போதைப் பொருளுக்கு எதிரான ஐதராபாத் போலீசின் பிரசார பாடலையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



latest tamil news


இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் கூறுகையில், ‛ஐதராபாத் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரேடிசன் புளூ நட்சத்திர ஹோட்டலில் நடத்திய சோதனையில் 35 பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றனர். அதேநேரத்தில், நடிகர் நாகபாபு வெளியிட்ட வீடியோவில், ‛எனது மகள் நிஹாரிகா அந்த ஹோட்டலில் இருந்தது உண்மை. ஆனால், அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம்' எனக் கூறியுள்ளார். நிஹாரிகா தமிழில் ‛ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஏப்-202223:22:15 IST Report Abuse
Ramesh Sargam சினிமா துறையில் இருப்பவர்களுக்கும், போதை பொருள் விற்பவர்களுக்கும் பல காலமாக தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு எல்லோருக்கும் தெரியும், குறிப்பாக காவல் துறைக்கு நன்றாக தெரியும். காவல் துறைக்கு தெரிந்தாலும் அவர்கள், விஷயம் இதுபோல் முற்றும் வரை ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மாதாமாதம் கிடைக்க வேண்டிய அந்த மாமூல் கிடைப்பதால். விஷயம் இதுபோல் முற்றினால், ஏதோ ஒரு name sake -க்கு ஒரு வழக்கு பதிவு செய்வார்கள். பிறகு நம் நாட்டில் உள்ள வேலை இல்லாத, ஆனால் நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்த தெரிந்த வக்கீல்கள் கும்பல், அந்த போதை கும்பலுக்கு ஜாமீன் எடுத்து அவர்களை வெளியில் நடமாட விடும். நம் நாட்டில் சட்டம் இருக்கிறதே, அது ஒரு வினோதம். ஏழை குற்றவாளிகளுக்கு ஒரு நியாயம், பணக்கார குற்றவாளிகளுக்கு ஒரு நியாயம். வெட்கம் வேதனை
Rate this:
Cancel
04-ஏப்-202220:11:39 IST Report Abuse
அப்புசாமி பொய் வழக்கு. ஆரியன் கானுக்கும் இதே தான் நேர்ந்தது. எல்லோரும் அப்பாவிகள். சீக்கிரம் வெளியே வந்துருவாங்க.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
04-ஏப்-202214:15:38 IST Report Abuse
அசோக்ராஜ் அபூர்வமான நடவடிக்கையாக இருக்கிறது. த்ராவிஷ தேசத்தைப் பாருங்கள். ஈசிஆர் ஓஎம்ஆர் என்று இரு பெரும் நெடுஞ்சாலைகளையே ஆபிரகாமிய அரசு ஒழுங்கீனத்திற்கு என்றே ஒதுக்கித் தந்துள்ளது. அரசியல், சினிமா, போலீஸ், அதிகாரி, வ்யாபாரி, தொழிலதிபர், ரவடி என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களும் அமைதியாகக் கூடி ஒழுங்கீனம் துய்க்கிறார்கள். மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். த்ராவிஷம் வெல்லட்டும்.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
04-ஏப்-202220:04:56 IST Report Abuse
Fastrackவாராவாரம் சரியா மாமூல் தருவதில்லையா .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X