விற்கப்பட்ட கோவில் நிலம்! விறுவிறுப்பாகுது விசாரணைக்களம்!

Added : ஏப் 05, 2022 | |
Advertisement
உச்சி வெயில் கொளுத்தியது; சித்ரா கொடுத்த பழரசத்தை சுவைத்தபடியே, மித்ரா, ''கட்சியை பலப்படுத்த, மத்த கட்சியில இருக்கிறவங்கள தான், தங்களோட கட்சிக்கு இழுப்பாங்க; ஆனா, சிட்டிக்குள்ள, ஒரே கட்சிக்குள்ள அணி திரட்டறாங்களாம்,'' என, 'கூலாக', அரசியல் பேசத் துவங்கினாள் மித்ரா.''மாவட்டம், நகரம்னு, தனித்தனி கோஷ்டியா தி.மு.க.,காரங்க செயல்பட்டதால தான், கட்சி ரீதியா ரெண்டு
விற்கப்பட்ட கோவில் நிலம்! விறுவிறுப்பாகுது விசாரணைக்களம்!

உச்சி வெயில் கொளுத்தியது; சித்ரா கொடுத்த பழரசத்தை சுவைத்தபடியே, மித்ரா, ''கட்சியை பலப்படுத்த, மத்த கட்சியில இருக்கிறவங்கள தான், தங்களோட கட்சிக்கு இழுப்பாங்க; ஆனா, சிட்டிக்குள்ள, ஒரே கட்சிக்குள்ள அணி திரட்டறாங்களாம்,'' என, 'கூலாக', அரசியல் பேசத் துவங்கினாள் மித்ரா.''மாவட்டம், நகரம்னு, தனித்தனி கோஷ்டியா தி.மு.க.,காரங்க செயல்பட்டதால தான், கட்சி ரீதியா ரெண்டு மாவட்டங்களை, கட்சித்தலைமை உருவாக்குச்சு. இப்ப என்னடான்னா, லோக்கல் மினிஸ்டர் தரப்பு தனி அணியாகவும், எம்.எல்.ஏ., தரப்பு இன்னொரு அணியாகவும் செயல்படறாங்க.
இப்போ புதுசா, மேயர் ஆதரவாளருங்க, தனி அணியை உருவாக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதனால, அவங்கங்க அணியில இருக்கிறவங்கள காப்பாத்தறதே பெரிய வேலையா போச்சாம்.''ஆளுங்கட்சி ரெண்டுபட்டா, எதிர்க்கட்சிக்கு கொண்டாட்டம்ங்கறதை, மறந்துடுறாங்க போல. சிட்டிக்குள்ள எந்த நிகழ்ச்சி, கூட்டம் நடந்தாலும், தவறாம கலந்துக்குற தெற்கு வி.ஐ.பி., கொஞ்சம் நாள் முன்னாடி, கலெக்டர் ஆபீஸ்ல, அமைச்சர் தலைமைல நடந்த ஆய்வுக்கூட்டம், கால்நடை மருத்துவமனை, கட்டட அடிக்கல் நாட்டு விழானு எதுலயும் கலந்துக்கலையாம். அதே சமயம், வடக்கு தொகுதிக்குள்ள போயி, தொழிலாளர் நலத்துறை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தி வச்சிருக்காரு.
இதுதொடர்பா, கலெக்டர் ஆபீசுக்கே எதுவும் தெரியாதாம்'' என்று பெருமூச்சுடன் முடித்தாள் மித்ரா.''கலெக்டர் ஆபீஸ்ல நடந்த ஆய்வுக்கூட்டத்துல, 'ஸ்மார்ட் சிட்டி' வேலை தொடர்பா, அமைச்சர் மேலோட்டமா தான் கேள்வி கேட்டிருக்காரு; ஆனா, மேயர், ஒவ்வொரு வேலையை பத்தியும், பாயின்ட், பாயின்டா துருவி, துருவி கேள்வி கேட்டிருக்காரு. சில வேலைங்க, பூமி பூஜை போட்டும் துவங்காம இருக்கு; அந்த நிதி என்னாச்சு, வேலை நடக்குமா, நடக்காதான்னு, கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிகாரிகள நெளிய வச்சுட்டாராம். பொறுமையிழந்த அமைச்சரு, 'போதும்..போதும், டைம் ஆகிடுச்சு, பாலம் கட்ற வேலைய பார்க்க போகலாம்'னு சொல்லி, 'ரூட்'ட மாத்தி விட்டுட்டாராம்.''கட்சி வி.ஐ.பி.,ங்க ஒவ்வொருத்தரும் மேலிடத்துல தனித்தனியா செல்வாக்கை வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு கோஷ்டில இருக்கிறவங்களயும் திருப்திப்படுத்துற மாதிரி கட்சி மேலிடம் பொறுப்புக்கொடுத்தாலும், அதுவே வினையா வந்து முடியுது. கோஷ்டிகள் குறையாம அதிகமாயிட்டேதான் வருது'' என்று, ஆளுங்கட்சி பிரமுகர் போல் ஆதங்கப்பட்டாள், சித்ரா.அதிகாரிகள் 'செக்'''ஆளுங்கட்சி வி.வி.ஐ.பி., ஒருத்தரு காங்கயம் ரோட்டுல, கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி, இடம் வாங்கி, புதுசா வீடு கட்டி குடி போனாரு. அந்த வீடு, அவருக்கு சரிப்பட்டு வராததால, சிட்டிக்குள்ள இருக்கிற பிரபல ஜூவல்லரி உரிமையாளருக்கு 6 'சி'க்கு வித்துட்டாரு.
'அம்மனை' வணங்கி, 'சாமி' தரிசனம் செஞ்சு, பரஸ்பர நம்பிக்கையின் பேர்ல தான், இந்த 'டீல்' முடிஞ்சிருக்கு; அப்போதைக்கு, கிரயம் எதுவும் செய்யலையாம். இப்போ, அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்ய போனப்போ, அந்த இடம், கோவில் நிலம்ன்னு சொல்றாங்களாம். கோவில் நிலத்துல, எப்படி வீடு கட்ட அனுமதி கொடுத்தீங்கன்னு, பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு, உயரதிகாரிங்க 'செக்' வச்சிட்டாங்களாம். எப்படியாவது எங்களை காப்பாத்துங்கன்னு, சாமியை வேண்டிட்டு இருக்காங்களாம் அந்த ஆபீசருங்க.''இதுல, யார் தலை உருள போகுதோ… தில்லுமுல்லு பண்ணுனா, என்னைக்கு இருந்தாலும், ஒரு நாள் மாட்டிக்கணும்... விசாரணைக்களம் விறுவிறுப்பாக வாய்ப்பு இ ருக்கு'' என, 'நாட்டாமை' போல் தீர்ப்பு வாசித்தாள் மித்ரா.பந்தல் பெயரில் பக்கா 'பிளான்'''குப்பை அள்ளல, தண்ணீ வரலை, தெரு விளக்கு எரியலைனு, ஒவ்வொரு விஷயத்தையும் பெரிசாக்கி ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நடத்துற, காம்ரேடுங்க இப்பல்லாம், பெரிசா போராட்டம் நடத்தறது இல்ல. அதிகாரிகள பாத்து மனு கொடுக்கிறதோட நிறுத்திக்கிறாங்களாம்.
இப்படித்தான், ரோடு பிரச்னை சம்பந்தமா, மாநகராட்சி வார்டுல, மக்கள் மறியல் செஞ்சாங்க. சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரு எட்டிக்கூட பார்க்கலையாம். உங்களுக்கு எதுக்கு நான் செய்யணும்ன்னு சொல்லிட்டாராம்...'' என்று தகவலை பகிர்ந்தாள் சித்ரா.''நம்ம 'அருணாச்சலம்' அண்ணா கூட இத பத்தி பேசிக்கிட்டு இருந்தாரு,'' என ஏற்கனவே விஷயம் தெரிந்தவளாய்க் காட்டினாள், மித்ரா.''கோடை வந்துடுச்சுல்ல. சிட்டிக்குள்ள, ஒவ்வொரு அமைப்பும், போட்டி போட்டு நீர்மோர் பந்தல் திறக்கிறாங்க. பழைய மார்க்கெட் வீதியில, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல ரோடு போட்டதால அங்க இருந்த ஆக்கிரமிப்பை எடுத்துட்டாங்க. இப்போ, அதே இடத்துல, நீர்மோர் பந்தல்ங்கற பேர்ல, தற்காலிகமாக ெஷட் போட்டுட்டாங்க. ரெண்டு மாசம் நீர்மோர் கொடுத்துட்டு, அப்புறமா அந்த இடத்த அப்படியே ஆட்டோ, வேன் ஸ்டாண்டா மாத்திக்க 'பிளான்' பண்ணிட்டாங்களாம். கவுன்சிலர் ஆதரவு இருக்கிறதால, எதிர்ப்பு வந்தாலும் சமாளிச்சுக்கலாம்ங்கற நம்பிக்கைல இருக்காங்க'' என்று ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தினாள் சித்ரா.போலி நகைகள்''போன வாரம் முழுக்க, நிறைய நாள் பேங்க் லீவுங்கறதால, மக்கள் ரொம்ப சிரமப்பட்டுட்டாங்க. நிறைய ஏ.டி.எம்.,ல பணம் கூட இல்லையாம்,'' என, தான் பணம் எடுக்க முடியாமல் திணறிய அனுபவத்தை சொல்லி நொந்துக் கொண்டாள் மித்ரா.''என்ன பண்றது மித்து. ஏ.டி.எம்.,ன்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. கேத்தனுார் ஸ்டேட் பேங்க் நகை மோசடி சம்பவத்துல, இன்னும் கொஞ்சம் பேரு சிக்க வாய்ப்பு இருக்குன்னு, பேசிக்கிறாங்க.
அடகு வைச்ச நகைகள்ல, சிலது போலியா கூட இருக்கலாம்னு, போலீஸ் சந்தேகப்படுதாம். அதனாலதான், விசாரணை தாமதம் ஆகுதுன்னு, நம்ம 'சேகர்' அங்கிள் சொன்னாரு...''எந்த விஷயம் பண்ணுணாலும், 'பிளான்' பண்ணி பண்ணலைன்னா, இப்படி தான் மாட்டிக்கணும். இப்படித்தான், திருப்பூர் பக்கத்துல இருக்கிற நகராட்சியில, நிலைக்குழுவுக்கு உறுப்பினர்கள தேர்வு பண்ண கூட்டம் போட்டிருக்காங்க. ஏற்கனவே, 'எல்லாம்' பேசி முடிச்ச நிலைமைல, போட்டியே இல்லாம, உறுப்பினர்கள தேர்வு பண்ணிட்டாங்க. பேசி வச்சு முடிக்கிற விஷயத்துக்கு தான், 'செலக்ஷன் மீட்டிங்' ன்னு பேரு வைச்சு, ஒரு கூட்டத்தை போடுவாங்களான்னு,

சில கவுன்சிலருங்க கலாய்ச்சிருக்காங்க. அவங்க கலாய்ச்சதை, யாருமே காதுல வாங்கிக்கலைன்னு, 'கவிதா' அக்கா சொல்லி தான், எனக்கு தெரிஞ்சது'' என்று சித்ரா விவரித்தாள்.இப்படியுமா இருப்பாங்க!''கொஞ்ச நாள் முன்னாடி சிட்டிக்குள் இருக்கிற பேன்சி கடைக்கு போன ரெண்டு பேரு, பேனா வாங்குற மாதிரி நடிச்சு, அங்க இருந்த பெண்கள்கிட்ட இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகையை திருடிட்டு ஓடிட்டாங்க. அங்க இருந்த, 'சிசிடிவி', கேமராவுல பதிவான காட்சிகளை வச்சு, ரெண்டு பேரை போலீஸ் கைது பண்ணாங்க. இந்த ரெண்டு பேரும், ஏற்கனவே ஒரு கேஸ்ல சிக்கி, கோவை ஜெயில்ல இருந்து, சமீபத்துல தான் வெளிய வந்திருக்காங்க.அதுல ஒருத்தரு தான், 'கோவை ஜெயிலுக்குள்ள விதிமீறல் நடக்குது; சரியா உணவு தர்றது இல்லை. பாகுபாடு பாக்குறாங்கன்னு, பொங்கியிருக்காரு. 'யூடியூப்' சேனலுக்கு பேட்டியும் கொடுத்திருக்காரு. கலெக்டரு, மனித உரிமை கமிஷன்னு புகார் மனுவும் அனுப்பியிருக்காருங்கற விஷயம் தெரிய வந்துருக்கு'' என்று 'போலி' ஆசாமியைப் பகிரங்கப்படுத்தினாள், மித்ரா.''யாரை நம்புறதுன்னே தெரியலையே…'' என நொந்து கொண்ட சித்ரா, ''குன்னத்துார்ல, பக்கத்து பக்கத்து வீட்டுக்காரங்களோட நாய்ங்க சண்டை போட்டதுல, ரெண்டு வீட்டுக்காரங்களுக்கும் வாய்தகராறு ஏற்பட, ஸ்டேஷன் வரைக்கும் பஞ்சாயத்து போயிருக்கு. அதுல, ஒருத்தரு விலங்கு நல ஆர்வலராம். அவர் மேல மட்டும் கேஸ் போட்டு, உள்ளே தள்ளிட்டாரு அந்த ஸ்டேஷன் அதிகாரி. ஏன், அப்படி பண்ணுனாருன்னு விசாரிச்சா, அந்த ஊர்ல, போன வருஷம், 10 நாய்ங்க ஏதோ ஒரு காரணத்துக்காக செத்து போயிருக்கு. இதுதொடர்பா விசாரிக்கணும்னு, அந்த விலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரை, அந்த ஸ்டேஷன் அதிகாரி விசாரிக்காததால, மேலிடம் வரைக்கும் விவகாரத்தை கொண்டு போயிருக்காரு, அந்த ஆர்வலரு. அந்த கோபத்தை மனசுல வைச்சுட்டு தான், இப்படி பழிவாங்கிட்டார்ன்னு, பேசிக்கிறாங்க. இதப்பத்தி துரைசாமி அங்கிள் கிட்ட கேட்டா, விவரம் தெரியும்'' என்று முடித்தாள்.''இப்பெல்லாம், கண்ணுமுன்னாடி அடிதடி, சண்டை சச்சரவு, வழிப்பறின்னு எது நடந்தாலும், போலீசுக்கு தகவல் சொல்ல முடியாத நிலைமை தான் இருக்கு'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.100க்கு டயல் செய்ய அச்சம்''என்ன ஆச்சு? 100க்கு டயல் பண்ணி சொல்லிட்டா, போலீஸ் பார்த்துப்பாங்களே?'' என்று கேள்வி எழுப்பிாள் சித்ரா.''அதுலதான் பிரச்னையே. 100க்கு போன் பண்ணி, 'இங்க அடிதடி நடக்குது, வந்து பாருங்க'ன்னு தகவல் சொன்னா, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரங்க, சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரா போகாம, 100க்கு போன் பண்றவங்களையே கூப்பிட்டு, 'என்ன பிரச்னை, யாரு பிரச்னை பண்றா?'ன்னு, கேள்வி மேல கேள்வி கேட்டு, அவங்கள 'டென்ஷன்' பண்ணிடறாங்களாம். அதுக்கு பயந்துட்டே நிறைய பேரு, 100க்கு போன் பண்றதை விட்டுட்டாங்களாம். பெரிய ஆபீசர்ங்க, இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிச்சா பரவாயில்ல''''நல்லுார் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஜெயிலுக்கு போகிற சந்தில், இரவு நேரத்துல சூதாட்டம் களைகட்டுதாம். போனவாரம், 10க்கும் அதிகமான சொகுசு கார்கள்ல வந்தவங்க, விடிய விடிய சூதாட்டம் நடத்தி, பெரிய தொகையை அள்ளிட்டு போயிருக்காங்க. இதை யாருகிட்ட போயி சொல்ல'' என்று மித்ரா கவலைப்பட்டாள்.''இப்ப எல்லாம், டிரான்ஸ்பர், புரமோஷனுக்கு சிபாரிசு பண்ற நிலைமைக்கு, கட்சி வி.ஐ.பி.,களோட மனைவிமார்களும் வந்துட்டாங்க. அவிநாசியில இருக்கிற பெண்கள் ஸ்டேஷன்ல வேல பார்க்குற ஒரு ஆபீசர், நாலு வருஷமா ஒரே இடத்துல இருக்காரு... தொடர்ந்து அங்கேயே இருக்க, தன்னோட கல்லுாரி தோழியா இருந்த ஒரு அமைச்சரோட மனைவிகிட்ட, சிபாரிசுக்கு பரிந்துரை பண்ண சொல்லி கேட்டிருக்காங்களாம்,'' என்ற மித்ரா, ''ஒரு லெமன் டீ போட்டு எடுத்துட்டு வாக்கா. குடிச்சுட்டு கிளம்பறேன்; நேரமாகுது'' என சொல்ல, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.நீர்மோர் பந்தல்ங்கற பேர்ல, தற்காலிகமாக ெஷட் போட்டுட்டாங்க. ரெண்டு மாசம் நீர்மோர் கொடுத்துட்டு, அப்புறமா அந்த இடத்த அப்படியே ஆட்டோ, வேன் ஸ்டாண்டா மாத்திக்க 'பிளான்' பண்ணிட்டாங்களாம்.போலீஸ்காரங்க, சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரா போகாம, 100க்கு போன் பண்றவங்களையே கூப்பிட்டு, 'என்ன பிரச்னை, யாரு பிரச்னை பண்றா?'ன்னு, கேள்வி மேல கேள்வி கேட்டு, அவங்கள 'டென்ஷன்' பண்ணிடறாங்களாம். அதுக்கு பயந்துட்டே நிறைய பேரு, 100க்கு போன் பண்றதை விட்டுட்டாங்களாம். ப

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X