எக்ஸ்குளுசிவ் செய்தி

ரேஷன் கடைகளில் முறைகேடா? 98840 00845க்கு 'டயல்' செய்யலாம்!

Added : ஏப் 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : 'கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம், முகவூர் கூட்டுறவு வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை, பாலியல் தொந்தரவு செய்வதாகவும், பணியாளர்களை
ரேஷன் கடைகளில் முறைகேடா? 98840 00845க்கு 'டயல்' செய்யலாம்!

சென்னை : 'கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம், முகவூர் கூட்டுறவு வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை, பாலியல் தொந்தரவு செய்வதாகவும், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. புகார்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்ச் 30ல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின், 98840 00845 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் புகார் அளிக்கலாம்.எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும், எந்தவித நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல், அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள்.இவ்வாறு பெரியசாமி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஏப்-202221:44:15 IST Report Abuse
S. Narayanan டயல் செஞ்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாம் வெத்து வேட்டு. மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்க வழி.
Rate this:
Cancel
06-ஏப்-202210:30:56 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) இந்த நம்பர் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. எத்தனையோ நம்பர் கொடுக்கிறார்கள். புகார்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், லஞ்ச ஊழல்கள் மாறவேயில்லை. காரணம், எல்லாமே பெயருக்குத்தான். நல்ல விடியால்தான் போங்க.
Rate this:
Cancel
Subramanian C - Kualalumpur,இந்தியா
06-ஏப்-202209:19:17 IST Report Abuse
Subramanian C திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. (எத்தனை சட்டங்கள் வந்தாலும் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X