குப்பையில் இருந்து உரம், மின்சாரம், காஸ்: மதுரை கிராமங்களுக்கு கொட்ட போகிறது வருவாய்!

Updated : ஏப் 06, 2022 | Added : ஏப் 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மதுரை: மதுரை கிராமங்களில் குப்பையால் சுகாதாரம் கெடுவதோடு, நீர், நிலம் மாசுபாடும் அதிகரிக்கிறது. குப்பையில் இருந்து இயற்கை உரம், மின்சாரம், காஸ் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் சேர்க்கலாம்'' என்கிறார் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா. மும்பை பாபா அணுசக்தி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை உரம், காஸ் அல்லது மின்சாரம் தயாரித்து வருவாய் ஈட்ட, மதுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: மதுரை கிராமங்களில் குப்பையால் சுகாதாரம் கெடுவதோடு, நீர், நிலம் மாசுபாடும் அதிகரிக்கிறது. குப்பையில் இருந்து இயற்கை உரம், மின்சாரம், காஸ் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் சேர்க்கலாம்'' என்கிறார் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா.



latest tamil news




மும்பை பாபா அணுசக்தி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை உரம், காஸ் அல்லது மின்சாரம் தயாரித்து வருவாய் ஈட்ட, மதுரை மாவட்டத்தின் முன்னோடி திட்டமாக ஒத்தக்கடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அங்குள்ள காந்திநகர் பகுதி மயானத்தில் துவங்கியுள்ளன. இதை நேற்று கலெக்டர் அனீஷ்சேகர், விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் இந்துமதி ஆய்வு செய்தனர். பி.டி.ஓ., வில்சன், பிரேம்ராஜன், ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி சரவணன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விஞ்ஞானி கூறியதாவது: ஊராட்சியில் சேரும் குப்பை இங்குள்ள தொட்டியில் கொட்டப்பட்டு 19 நாட்களில் (பழைய முறையில் 40 நாட்கள்) இயந்திரங்கள் மூலம் அவை இயற்கை உரமாகவும், பெறப்படும் மீத்தேன் வாயுவில் இருந்து எரிவாயு அல்லது மின்சாரம் பெறப்படும். இம்முறையில் 80 முதல் 90 சதவீத பலன்பெறலாம் (பழைய முறையில் 45 சதவீதமே பலன் கிடைத்தது).


latest tamil news




ஒரு டன் குப்பையில் 80 - 100 கிலோ இயற்கை உரம், 21 கிலோ எரிவாயு அல்லது 80 - 100 யூனிட் மின்சாரம் பெறலாம். இங்கு தினமும் 2 டன் குப்பை சேர்வதால் தினமும் ரூ.6 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். இந்த ஏற்பாடுகளுக்காக ரூ.55 லட்சம் செலவாகும். இதனால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், நோய் தொற்று, காற்று, நீராதாரமும் மாசுபடாது.

பொருளாதார ரீதியாகவும் ஊராட்சி மேம்படும். குப்பையை தினமும் சேகரிப்பது தொடர்பாக ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், இறைச்சி கடைகள், துாய்மை பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இத்திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202200:21:32 IST Report Abuse
sankar விஞானி செல்லப்பா செட்டப் செல்லப்பா மாறி தெஇர்யுது எந்த விஞானி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஒப்பி சயின்ஸ் படித்த விஞானியா இல்ல ராமர் பிள்ளை மாறி வில்லேஜ விஞானியா ???
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
06-ஏப்-202219:53:57 IST Report Abuse
Soumya ஆனா கட்டிங் கமிஷன் முக்கியம்
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
06-ஏப்-202213:24:45 IST Report Abuse
மணி மதுரையில் குப்பைக்கா பஞ்சம், அள்ள அள்ள குறையாம கிடைக்குமே, ஆயிரம் மெகாவாட்டு ன்னாலும் அங்கிருந்து அசால்ட்டா எடுக்கலாமப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X