வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியலை எதிர்த்து பா.ஜ., போராடும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பாஜ அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரே தேசம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை மாற்ற முடியாது என்ற கருத்தை நாம் முறியடித்துள்ளோம். நாடு மாற்றம் கண்டு வருவதுடன், தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. உலகில் 180 கோடி தடுப்பூசி போட்ட நாடு நமது நாடு மட்டுமே.
இரட்டை எஞ்சின் அரசுகள், ஏழை மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளோம். பா.ஜ.,வின் வெற்றியை பெண்கள் கொண்டாடுகின்றனர். பெண்களுக்கு புதிய அதிகாரம், சுகாதார வசதிகள், ரேசன், அதிகாரத்தை அளித்துள்ளோம். நிதி சுதந்திரம் கிடைத்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தான் நமது முக்கிய நோக்கம்.

வாரிசுகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக சில கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டு வங்கி அரசியலை நாம் மாற்றினோம். அத்தகைய கட்சிகள் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டன. வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பது இல்லை. வாரிசு அரசியலால் இந்தியா பாழாகிவிட்டது. வாரிசு அரசியலை வேரறுப்போம். அதனை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., போராடும். அரசியல் மாண்புகளை, அனைத்து மாநிலங்களிலும் நிலை நிறுத்துவம் வாரிசுகளின் ஆட்சிக்கு எதிராக பா.ஜ., மட்டுமே பணியாற்றும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE