அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டார்கள்: இலங்கை வியாபாரிகள் கொதிப்பு

Updated : ஏப் 06, 2022 | Added : ஏப் 06, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே அரசு அனைத்தையும் சீனாவுக்கு விற்று வருகிறது. நாட்டில் எதுவும் இல்லை, மற்ற நாடுகளிடம் இருந்து கடனாக எல்லாவற்றையும் வாங்கியுள்ளனர் என இலங்கை உணவு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. 3 மாதங்களுக்கு
SriLankan Traders, Embattled PM, Sold Everything, China, Srilanka, Traders, இலங்கை, வியாபாரிகள், சீனா, பிரதமர், அதிபர், ராஜபக்சே,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே அரசு அனைத்தையும் சீனாவுக்கு விற்று வருகிறது. நாட்டில் எதுவும் இல்லை, மற்ற நாடுகளிடம் இருந்து கடனாக எல்லாவற்றையும் வாங்கியுள்ளனர் என இலங்கை உணவு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. 3 மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ ரூ.500க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.1000 ஆக உள்ளது. பேரிக்காய் கிலோ ரூ.1500க்கு விற்கப்படுகிறது. மக்களிடமும் பணம் இல்லை என்கின்றனர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபராட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போர் கொடி உயர்த்த தொடங்கியுள்ளார்.


latest tamil news


இது பற்றி இந்திய ஊடகம் ஒன்றிற்கு இலங்கை வியாபாரிகள் அளித்த பேட்டி: தினமும் விலைவாசி அதிகரித்து வருகிறது. அரசிடம் பணம் எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றது. அதுவே மிகப் பெரிய பிரச்னை. சீனாவிடம் அனைத்தையும் விற்றதால் இலங்கையிடம் பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. எங்களுக்கும் வியாபாரம் எதுவும் இல்லை. கோத்தபய ராஜபக்சே நல்லவர் கிடையாது. அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
07-ஏப்-202211:30:30 IST Report Abuse
jagan இலங்கையை இந்தியாவுடன் ரெண்டு மாநிலமாக சேர்க்கும் காலம் வந்து விட்டது. தமிழ் மற்றும் சிங்களம் (சிங்களவன் பூர்விகம் ஒடிஷா). நாம் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தான்
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
07-ஏப்-202207:12:42 IST Report Abuse
sankar சங்க காலத்திலே இருந்து தமிழர்கள் லங்காவில் இருந்துள்ளார்கள் ஒற்றுமையாக சிங்களவர்கள் கூட பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறாகள் பண்டார நாயக்க குடும்பமும் ராஜபக்ச குடும்பமும்தான் இனஒற்றுமையை குழப்பி தமிழர்களை அழித்தால்தான் நாடு முன்னேறும் என்று சிங்களவர்கள் மத்தியில் பொய் அரசியல் பண்ணி இனப்படுகொலை(முல்லைவால்) செய்து நாட்டை சீனாவிடம் அடகு வைத்து வேண்டிய பணம் சம்பாதித்து அமெரிக்காவில் யூரோப்பிலும் ஆடம்பர வாழ்க்கை வகுத்துக்கொண்டார்கள் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பல முறை உயிர் போனதுதான் மிச்சம் இறைவன் நின்று தண்டிப்பான் அன்று இந்திய தமிழர்களுக்கு எதிராக சீனாவுடன் ஆட்டம் போட்ட பண்டாரநாயக்க குடும்பம் அட்ரஸ் இல்லாமல் போனது இந்தமுறை இறைவன் ராஜபக்ஸாய் குடும்பங்கள் மேல் கை வைப்பான் இதுதான் விதி சாபங்கள் வீண்போகாது
Rate this:
Cancel
07-ஏப்-202207:06:16 IST Report Abuse
ராஜா இது போன தேர்தலில் ராஜபக்க்ஷே குடும்பத்துக்கு வாக்களிக்கும் போது தெரியவில்லையா!?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X