கோவை நகரில் 16 சாலைகளை சீரமைக்க ரூ.140 கோடி; விரைவில் பணி துவக்கம்!

Updated : ஏப் 07, 2022 | Added : ஏப் 07, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை நகரில் உள்ள 16 மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கும் பணி, ரூ.140 கோடி மதிப்பில் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளது. இதனால் படுமோசமான ரோடுகளில் பயணிக்கும் துன்பத்திலிருந்து, கோவை மக்களுக்கு விரைவில் விடுதலை கிடைக்கவுள்ளது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு முக்கிய ரோடுகளிலும், பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வேறு சில ரோடுகளில், பாதாள சாக்கடைத்
coimbatore, roads, damage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை நகரில் உள்ள 16 மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கும் பணி, ரூ.140 கோடி மதிப்பில் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளது. இதனால் படுமோசமான ரோடுகளில் பயணிக்கும் துன்பத்திலிருந்து, கோவை மக்களுக்கு விரைவில் விடுதலை கிடைக்கவுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு முக்கிய ரோடுகளிலும், பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வேறு சில ரோடுகளில், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான குழாய்கள், பைப் லைன் காஸ், சூயஸ் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு எல்லா ரோடுகளிலுமே, ஏதாவது ஒரு பணி நடந்து கொண்டிருப்பதால், அனைத்து ரோடுகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் பணி நடந்து முடிந்த ரோடுகளும், பணியே நடக்காத ரோடுகளும் பயணிக்கவே முடியாத அளவுக்கு படுமோசமாக உள்ளன.



நிதி ஒதுக்கியும் பணி துவங்கலை


இவற்றில், மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ரோடுகள்தான், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், பள்ளமும் மேடுமாக வாகன ஓட்டிகளை வாட்டி வதைக்கின்றன.இவற்றைச் சீரமைக்க வேண்டிய இவ்விரு துறைகளுக்கும், நிதியே ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் நடக்கவில்லை என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

மாநகராட்சி ரோடுகளைச் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டதாக, மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஆனால் அந்த நிதியில் இன்னும் பணிகள் எதுவும் துவக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



ரூ.140 கோடியில் விரைவில் பணிகள்


இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பல்வேறு ரோடுகளையும் சீரமைக்கும் பணி, விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 16 ரோடுகள், ரூ.140கோடி மதிப்பில் சீரமைக்கப்படவுள்ளதாக துறையின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவற்றில் சில ரோடுகள், இரு வழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தப்படவுள்ளன.


latest tamil news



நான்கு வழியாகிறது மதுக்கரை ரோடு



தடாகம் ரோட்டில், அரசினர் பொறியியல் கல்லுாரியிலிருந்து ஐந்து கி.மீ., துாரத்துக்கும், சுந்தராபுரத்திலிருந்து போத்தனுார் வரை இரண்டு கி.மீ.,துாரத்துக்கும், இதே சந்திப்பிலிருந்து மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் 1.8 கி.மீ., துாரத்துக்கும் ரோடுகள் நான்கு வழிச்சாலையாக்கப்படுகின்றன. இந்த ரோடுகள் மீண்டும் மீண்டும் சேதமாகாத வகையில், மழைநீர் வடிகால் அமைக்கவும், பாதசாரிகள் பாதுகாப்பாக நடப்பதற்கு நடைபாதை அமைக்கவும்,மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

இவற்றைத் தவிர்த்து, தொண்டாமுத்துார் ரோடு (பூசாரிபாளையம் ரோடு), மருதமலை ரோடு, இடையர்பாளையம் ரோடு, செல்வபுரம் நுழைவாயிலில் உள்ள சிறுவாணி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளும் சீரமைக்கப்படவுள்ளன. திருச்சி ரோடு சுங்கத்திலிருந்து, வாலாங்குளம் பாலத்துக்கு முந்தைய சந்திப்பு வரையிலான 1.8 கி.மீ., துாரத்துக்கு, சாலையோர தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.இதற்கான டெண்டர் முடிவடைந்து, அடுத்த வாரத்தில் பணிகள் துவங்கவிருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



மாநகராட்சி சாலைகளே அதிகம்


இதேபோன்று, நகருக்குள் உள்ள மேலும் பல முக்கிய ரோடுகளை விரிவாக்கம் செய்யவும், புதிய பாலங்கள் கட்டவும், துறை சார்பில் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.இதேபோன்று, மாநகராட்சிக்குச் சொந்தமான ரோடுகளையும் விரைவாகச் சீரமைப்பதற்கு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் துவக்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென்று, கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், கோவை நகரில் மற்ற துறைகளின் ரோடுகளை விட, மாநகராட்சிக்குதான் அதிகபட்சமாக 2500 கி.மீ., துாரமுள்ள ரோடுகள் இருக்கின்றன. அதிலும் பெரும்பாலான ரோடுகள் படுமோசமாக இருப்பதுதான், இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
07-ஏப்-202212:33:26 IST Report Abuse
MANI DELHI இப்பதான் செய்தி வந்துருக்கு. இன்னும் அல்லக்கைகளுக்கு டெண்டர் என்ற பெயரில் சிபாரிசு செய்யணும். மேலிட கப்பம் மற்றும் தனது பங்கு என்று எல்லா செலவையும் மக்கள் வரிப்பணத்தில் சரி பண்ணனும். அதுக்கப்புறம் ரோடு மாதிரி போட்டு காமிச்சுருவாங்க. அதுக்குள் அடுத்த தேர்தல்...நாங்க திமுகவுக்கே ஓட்டுபோடுவோம். ஏனென்றால் நாங்கள் மறத்தமிழர். உங்களுக்குள்ளேயே பங்கு போட்டுக்குவோம்... இப்போதைக்கு ரோடு இல்லை. செய்திக்கு சந்தோசப்பட்டுக்குங்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-ஏப்-202211:56:58 IST Report Abuse
S.Baliah Seer அரக்கோணம் முதல், ஜோலார் பேட்டை வழியாக கோவை ,பெங்களூர் செல்லும் மக்கள் ரயிலையே பெரிதும் பயன் படுத்துகிறார்கள். கொரோனா காலத்தில் அடங்கி இருந்த இவர்கள், இப்போ கும்பல் கும்பலாக ,ரிஸர்வ்டு பெட்டிகளில் ஏறி அட்டகாசம் செய்கிறார்கள். டாய்லெட் கூட போகமுடியாதவாறு வழியை அடைத்துக் கொள்கிறார்கள்.கோவை,பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் வண்டிகள் இதற்கு உதாரணம்.தமிழக அரசு இந்த வாய்ப்பை பயன் படுத்தி சாலை போக்குவரத்தின் தரத்தை உயர்த்தலாமே.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
08-ஏப்-202203:14:10 IST Report Abuse
Neutral Umpireபேருந்தில் பயணிக்க டிக்கட்டு வாங்கணுமே .....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-ஏப்-202209:47:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கொள்ளையடிச்சவனுங்க கிட்டேருந்து புடுங்குறது தானே முறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X