உணவு செயலிகள் முடங்கியதால் மக்கள் அவதி..

Updated : ஏப் 07, 2022 | Added : ஏப் 07, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி,-உணவு, 'டெலிவரி' சேவைகளை வழங்கும், 'ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி' நிறுவனங்களின் செயலிகள் நேற்று முடங்கியதால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நம் நாட்டில், பல நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவைகளை வழங்கி வருகின்றன. கொரோனா பரவத் துவங்கியது முதல், இந்த சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இந்நிலையில், பிரதான உணவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-உணவு, 'டெலிவரி' சேவைகளை வழங்கும், 'ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி' நிறுவனங்களின் செயலிகள் நேற்று முடங்கியதால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.



latest tamil news



நம் நாட்டில், பல நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவைகளை வழங்கி வருகின்றன. கொரோனா பரவத் துவங்கியது முதல், இந்த சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இந்நிலையில், பிரதான உணவு டெலிவரி நிறுவனங்களான, ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கியின் செயலிகள் நேற்று திடீரென முடங்கின.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் புகார் அளித்தனர்.இதற்கு விளக்கம் அளித்து, ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் தனித்தனியே அறிக்கை வெளியிட்டன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தங்கள் செயலிகள் முடங்கியதாகவும், அதை சரி செய்யும் பணிநடந்து வருவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்தன.


latest tamil news



இந்த இரண்டு நிறுவனங்களும் நியாயமற்ற வணிக நடைமுறைகளை பின்பற்றுவதாக, சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 4ம் தேதி, இது குறித்து விசாரிக்க, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சி.சி.ஐ., எனப்படும், நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
loganathan - tirupur,இந்தியா
07-ஏப்-202210:17:54 IST Report Abuse
loganathan வணக்கம், முதலில் இதன் சேவை நிறுத்த வேண்டும், திருப்பூரில் இவுங்க சாலை விதிகளை மதிப்பதில்லை. முன்னாள், பின்னல் வரும் இரண்டு வாகனங்களை கிலே விழும் அளவுக்கு வேகமாக போவது, கட்டு அடிப்பது, போன் பேசி கொண்டு போவது,சிக்கல் நிற்பது இல்லை, இதனில் புக்கிங் செய்து சாப்பிடுவது பெரிய கௌரவமாக நினைக்கிரார்கள், எத்தனை நாளைக்கு வாங்க முடியும். நாகரிகம் என்ற பெயரில் அளவு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடவுளுக்குகித்தான் வெளிச்சம். நன்றி
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
07-ஏப்-202209:24:19 IST Report Abuse
KavikumarRam மக்களின் சோம்பேறித்தனம் இவர்களின் வியாபாரம். இந்த இரு நிறுவனங்களும் மிகவும் ஏமாற்ற தொடங்கி விட்டன. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-ஏப்-202207:55:09 IST Report Abuse
duruvasar அப்ப எல்லாம் சைக்கிளில் சென்று போண்டா, பக்கோடா வாங்கிக் கொண்டு வந்து பொருளின் விலையில் 50% கமிஷனராக எடுத்துக் கொண்டு சேவை செய்த வரலாறுகளை படித்திருக்கிறோம். இந்த பண்ணாட்டு நிறுவனங்கள் வந்து நமது பாரம்பரிய சிறு குறு தொண்டர்களை காணாமல் போக செய்துவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X