புதுச்சேரிக்கான நிதி உதவி ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

Updated : ஏப் 07, 2022 | Added : ஏப் 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுச்சேரி : ஜி.எஸ்.டி., இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசின் உதவியை ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சரிடம், கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.டில்லி சென்றுள்ள கவர்னர் தமிழிசை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு 2022- 23ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், 'மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதி உதவி' திட்டத்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி : ஜி.எஸ்.டி., இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசின் உதவியை ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சரிடம், கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.



latest tamil news



டில்லி சென்றுள்ள கவர்னர் தமிழிசை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு 2022- 23ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், 'மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதி உதவி' திட்டத்தை அறிவித்துள்ளது,
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்ட வரம்பிற்குள் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தினார்.மேலும், புதுச்சேரியின் குறைந்த வளம் மற்றும் நிதி ஆதாரங்களை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கான மத்திய உதவியை நீட்டிக்க வேண்டும்.


latest tamil news



இல்லையெனில், பிற யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவது போல், மத்திய மானியங்களை 100 சதவீதம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் உதவி நீட்டிக்கப்படாவிட்டால், ஜி.எஸ்.டி., இழப்பை ஈடு செய்யும் வகையில், 2022- - 23 நிதியாண்டில் மத்திய அரசு உதவியை ரூ. 3,400 கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான நிதி உதவியை நிதி அமைச்சகம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-202200:28:18 IST Report Abuse
Venugopal S புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி,ஆளும் கட்சி, முதல்வர் என்று எல்லாம் இருக்கிறதா ? அவர்கள் எல்லாம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பார்களா?
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). பாராட்டுக்குரியது. வரவேற்கிறோம்.2). முதல்வர் மற்றும் கவர்னர் இணைந்து செயல்பட்டால் இதுமாதிரியான நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.3). தமிழிசை மேடம் இந்தியாவின் ஜனாதிபதியாக வந்தால் நல்லாயிருக்கும். பார்ப்போம் ஆண்டவனின் சித்தம் என்னவென்று யாருக்கு தெரியும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
07-ஏப்-202212:55:32 IST Report Abuse
J. G. Muthuraj புதுச்சேரி முதல்வர் செய்யவேண்டிய வேலையை, புதுச்சேரி ஆளுநர் செய்றாரே..
Rate this:
07-ஏப்-202214:58:52 IST Report Abuse
ஆரூர் ரங்யூனியன் பிரதேசம் என்பதால் 🤔🤔முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமும் பொறுப்பும் அதிகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X