இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தர அமெரிக்கா தயார்

Added : ஏப் 07, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
வாஷிங்டன்; ரஷ்யாவை நாடாத பட்சத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் வாங்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்தியா கச்சா எண்ணெய் ,அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்; ரஷ்யாவை நாடாத பட்சத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் வாங்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.


latest tamil news




இருந்தும், இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங்கை இந்தியாவுக்கு அனுப்பியது. அவர், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தினார்.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி துறை செயலர் ஜென் சகி கூறியதாவது:

பொருளாதார தடையை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதிக்க, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை டில்லிக்கு அனுப்பியுள்ளோம். ரஷ்ய பொருட்கள் இறக்குமதியை, இந்தியா குறைப்பது தொடர்பாக பேச்சு நடக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் இறக்குமதியை இந்தியா அதிகரிக்காது என நம்புகிறோம். கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202209:00:36 IST Report Abuse
பேசும் தமிழன் ஏன்... இப்போதும் 8 எண்ணெய் உங்களிடம் இருந்து தானே வாங்கி வருகிறார்கள்... அதற்கான விலையை பாதியாக குறைந்து கொடுங்கள் பார்ப்போம்.... ஆனால் நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள்.... எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. ஆனால் எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நீங்கள்.. அமெரிக்கா எப்போதும் இந்தியா எதிர்ப்பு நிலையை தான் எடுத்து வந்து உள்ளது... இந்தியாவின் நட்பு நாடு.... எப்போதும் ரஷ்யா மட்டுமெ!!!
Rate this:
Cancel
chandrakumar - tiruppur,இந்தியா
08-ஏப்-202207:24:28 IST Report Abuse
chandrakumar ஒரு நாட்டை ஆட்சி செய்ய ஆளுமை மிக்க தலைவர் இருந்தால் உலகின் பெரியண்ணன் வல்லரசு அமெரிக்காவையே கெஞ்ச வைக்க முடியும் என்பதை உலகிற்க்கு உணர்த்திய நம் பிரதமர் மோடி அவர்களை தேசபக்தி கொண்ட அனைவரும் வாழ்த்தி வணங்குகிறோம். 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு கம்பீரமான தலைவனை நாம் பார்த்ததில்லை.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202223:39:42 IST Report Abuse
Fastrack அமெரிக்க நிர்வாகங்கள் இந்திய வம்சாவழியரிடம் தான் இருக்கு ..கமலா அம்மணி முதல் சுந்தர் பிச்சை சத்திய நாதெள்ளா இவுங்க பாத்துப்பாங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X