பிரிக்க முடியாதது என்ன?: முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்

Updated : ஏப் 09, 2022 | Added : ஏப் 09, 2022 | கருத்துகள் (89) | |
Advertisement
சென்னை: சினிமாவையும் , திமுகவையும் பிரிக்க முடியாது என சென்னையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் தக்ஷின் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். இந்த மாநாட்டில் நான் மிக ஆர்வமாக

சென்னை: சினிமாவையும் , திமுகவையும் பிரிக்க முடியாது என சென்னையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் தக்ஷின் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.




latest tamil news


சினிமாவையும் திமுகவையும் பிரிக்க முடியாது! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி ........


மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். இந்த மாநாட்டில் நான் மிக ஆர்வமாக பங்கேற்றுள்ளேன். முதல்வராக என்னை பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாக பாருங்கள். அப்பா முதல் எனது மகன் வரை சினிமா துறையில் தொடர்பு உண்டு. சினிமாவையும் ,திமுகவையும் பிரிக்க முடியாது போல் என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது.

திரைத்துறை வளர்ச்சி , சிந்தனை தூண்டுவதாக உள்ளது. குட்கா மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு திரைப்படத்தில் வாசகம் ஏற்படுத்த வேண்டும். முற்போக்கு சம்பந்தமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும்.



latest tamil news



திரைத்துறையில் முத்திரை பதித்தது தமிழ்நாடு. எனவே இந்த மாநிலத்தில் இந்த மாநாடு நடத்துவது மிக உகந்தததாக உள்ளது. கோவிட்டால் திரைப்பட துறை பாதிக்கப்பட்டுள்ளது.திரைத்துறை மேம்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202203:22:18 IST Report Abuse
Mani . V "சினிமாவையும் , திமுகவையும் பிரிக்க முடியாது என சென்னையில்......" நிச்சயமாக பாஸ். சினிமா இப்பொழுது உங்கள் குடும்பத்திடம் ஸாரி திமுகவுடன் மாட்டிக் கொண்டு கொஞசம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கிறது பாஸ்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202203:18:43 IST Report Abuse
Mani . V "ஆக" வையும், என்னையும் தப்பும், தவறுமான பழமொழியையும் என்னையும் பிரிக்க முடியாது.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-ஏப்-202202:13:12 IST Report Abuse
BASKAR TETCHANA பிரிக்க முடியாதது உங்களையும் நீங்கள் அடிக்கும் கொள்ளையையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X