வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரசுடன் கூட்டணி அமையுங்கள், முதல்வர் பதவி தர தயாராக உள்ளோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் கூறினோம். ஆனால், அதனை அவர் எங்களுடன் அவர் பேசக்கூட இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: காங்கிரசுடன் கூட்டணி அமையுங்கள். முதல்வராக்குகிறோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் தெளிவாக கூறினோம். ஆனால், அவர் எங்களுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. கன்ஷிராமால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருந்தாலும், உ.பி.,யில் தலித்களின் குரலை எடுத்து கூறியதற்காக அவர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்.ஆனால், அதற்காக போராட மாட்டேன் என மாயாவதி கூறுகிறார். பா.ஜ., நுழைவதற்கு மாயாவதி வழிவிட்டுவிட்டார். இதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை, பெகாசஸ் ஆகியவையே காரணம்.

மக்கள் பேசாவிட்டால், அரசியல் அமைப்புகள் கட்டுப்படுத்தப்படுவது தொடரும். அரசியல்சாசனம் பின்பற்றப்படாது. அரசியல்சாசனம் செயல்படாமல் போனால், தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், வேலையில்லாதோர், சிறு விவசாயிகள் மற்றும் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அரசியல்சாசனம் என்பது மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அமைப்புகள் இல்லாமல் முழுமை பெறுவது இல்லை. அதனை ஆர்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளது. நான், பணம் ஏதும் வாங்கியிருந்தால் என்னால் அரசுக்கு எதிராக பேசியிருக்க முடியாது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அரசியல்வாதிகள் பிடியில் உள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.