நடிகர் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை ஆஸ்கர் விருது குழு அறிவிப்பு

Added : ஏப் 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
லாஸ் ஏஞ்சலஸ்-ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொகுப்பாளரை அறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அடுத்த 10 ஆண்டு களுக்கு விழாக்களில் பங்கேற்க தடை விதித்து, ஆஸ்கர் விருது குழு அறிவித்துள்ளது.ஹாலிவுட் திரைப்படத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது, திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.சமீபத்தில்

லாஸ் ஏஞ்சலஸ்-ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொகுப்பாளரை அறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அடுத்த 10 ஆண்டு களுக்கு விழாக்களில் பங்கேற்க தடை விதித்து, ஆஸ்கர் விருது குழு அறிவித்துள்ளது.

ஹாலிவுட் திரைப்படத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது, திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியும், நடிகையுமான ஜடா பின்கட் குறித்து கிண்டலாக விமர்சித்தார். உடனே மேடை ஏறிய வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், அகாடமியின் இயக்குனர்கள் குழு கூட்டம் லாஸ் ஏஞ்சலசில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், வில் ஸ்மித் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.இதையடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ஆஸ்கர் விருது உட்பட அகாடமி நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க, வில் ஸ்மித்துக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.வழக்கமாக ஒரு ஆண்டு விருது பெறுவோர், அதற்கடுத்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியில், விருதுகளை வழங்குவர். தற்போது வில் ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்தாண்டு நடக்கும் விழாவில் விருது வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJ - dammam,சவுதி அரேபியா
10-ஏப்-202221:56:53 IST Report Abuse
RAJ So what? Will Oscar solve Ukraine issue? Bullshit. Sivaji ganesan was not awarded for Nobel who was a leg . What is this purpose of Nobel? Keep it there.one idiot was talking about someone s health issue and asahusband he slapped his face. What is the problem man?
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
10-ஏப்-202212:51:46 IST Report Abuse
Yogeshananda In the Oscar team many idiots are there
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X