ஊட்டி:ஊட்டியில், ஸ்ட்ராபெரி கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. கொரோனா தளர்வுக்கு பின், பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ட்ராபெரிக்கு மவுசு அதிகரிக்க துவங்கியுள்ளது. விவசாயி ராஜேஷ் கூறுகையில், ''கொரோனா காலகட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஸ்ட்ராபெரியை விற்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது. தளர்வுக்கு பின், விற்பனை அதிகரித்திருப்பதுடன், தற்போது கிலோவுக்கு, 300 ரூபாய் கிடைத்து வருகிறது,'' என்றார்.