பால் உற்பத்தி திறன், இனி குறையாது!| Dinamalar

பால் உற்பத்தி திறன், இனி குறையாது!

Added : ஏப் 10, 2022 | |
- சேதுராமன் சாத்தப்பன் - மடிவீக்கம் காணப்பட்டால், மாட்டுக்கு வலி மற்றும் அசவுகரியம் ஏற்படும். பால் கறப்பதைத் தடுக்க, மடியைத் தொடுவதைக்கூட மாடுகள் அனுமதிக்காது. பால் கறந்தால், பால் பொதுவாக ரத்தக் கட்டிகளுடன், துர்நாற்றத்துடனும் இருக்கும்; கறை படிந்திருக்கும். இதனால் பால் சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடுகிறது; மாடுகளின் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. பசியின்மை,

- சேதுராமன் சாத்தப்பன் - மடிவீக்கம் காணப்பட்டால், மாட்டுக்கு வலி மற்றும் அசவுகரியம் ஏற்படும். பால் கறப்பதைத் தடுக்க, மடியைத் தொடுவதைக்கூட மாடுகள் அனுமதிக்காது. பால் கறந்தால், பால் பொதுவாக ரத்தக் கட்டிகளுடன், துர்நாற்றத்துடனும் இருக்கும்; கறை படிந்திருக்கும். இதனால் பால் சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடுகிறது; மாடுகளின் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது.

பசியின்மை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை, இதன் மற்ற அறிகுறிகள். நோய் தாக்கிய கால்நடைகள் நீர்சத்து குறைந்து, எடை குறைவால் அவதிப்படுகின்றன. கடும் தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மடியில் சீழ் உருவாகும். 'முலையழற்சி' எனப்படும் இத்தகைய நோய், டோக்ஸீமியா அல்லது பாக்டீரேமியாவாக சிதைந்து, கடும் தொற்றின் விளைவாக மரணத்தையும் கூட ஏற்படுத்தலாம்.சந்தைகளில் தற்போது இருக்கும் மின் கடத்து திறன் மீட்டர், முலையழற்சியைக் கண்டறிவதற்கான நேரடி அணுகுமுறையாகும். இருப்பினும் மந்தைகள், தீவனம், நீர் உட்கொள்ளல், தட்பவெப்ப நிலை, கர்ப்பம் மற்றும் பாலுாட்டும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து கடத்துதிறன் மாறக்கூடும் என்பதால் இது நம்பகமானதல்ல.


குறைந்த விலை சாதனம்சைமர்டெக் நிறுவனம் கால்நடை அறிவியல், உயிர் மின்னியல், உயிரித் தொழில்நுட்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில், தயாரிப்புகளை வணிகமயமாக்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு 'ஸ்டார்ட் அப்'பாகும். திறமையான நோயறியும் கருவிகள், முன்கணிப்பு தொழில்நுட்பங்கள், மருந்துகள் ஆகியவற்றை உருவாக்குகிறது. இந்நிறுவனம், 'குவாடுமாஸ்டெஸ்ட்' (Quadmastest) என்ற முலையழற்சி கண்டறிதல் சாதனத்தை வெறும் 400 கிராம் எடையில் உருவாக்கியுள்ளது; எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது.இதன் மூலம் முலையழற்சியை அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். இது சிறிய அளவு பால் மாதிரிகளில் செய்யக்கூடிய விரைவான சோதனை. ஆரம்பகால கண்டறிதல் நோயின் முன்னேற்றத்தை தடுக்க உதவுகிறது மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பை தடுக்க உதவுகிறது


நோய் தொற்றை கண்டறிய எந்த ஆய்வகமும் தேவையில்லை. பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் இதை எளிதாக கழுவலாம்.இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த கருவிகளின் தேவையை குறைத்திருக்கிறது, விலையும் குறைவாக கிடைக்கிறது.முலையழற்சி மேலாண்மைத் துறை இந்தியாவில் ஒரு முக்கியமான துறையாகும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த துறை வருடந்தோறும் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் 15 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் இருப்பதால் தேவைகள் கூடிக்கொண்டே செல்கின்றன. இது போன்ற விலை குறைந்த கண்டுபிடிப்புகள், நாட்டின் அன்னிய செலாவணியை பெருமளவு சேமிக்கிறது. இணையதளம் https://www.chimertech.com/உங்கள் சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan @gmail.com, அலைபேசி: 9820451259, இணையதளம்: www.startupand businessnews.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X