கோவை ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டரை தொட்டது: விரைவாக பணம் வழங்க உத்தரவு

Added : ஏப் 10, 2022 | |
Advertisement
கோவை:கோவையில், ஆவின் பால் தினசரி விற்பனை, 2 லட்சம் லிட்டரை நெருங்கியிருக்கிறது.10 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்ய உத்தரவு கோவை ஆவின் நிர்வாகத்துக்கு கீழ், 350 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் செயல்படுகின்றன. இதுதவிர, 40 துணை சங்கங்கள் இயங்குகின்றன. நாளொன்றுக்கு, 1.45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், 1.75 லட்சம் லிட்டர் வரை தேவைப்பட்டதால்,

கோவை:கோவையில், ஆவின் பால் தினசரி விற்பனை, 2 லட்சம் லிட்டரை நெருங்கியிருக்கிறது.10 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்ய உத்தரவு கோவை ஆவின் நிர்வாகத்துக்கு கீழ், 350 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் செயல்படுகின்றன. இதுதவிர, 40 துணை சங்கங்கள் இயங்குகின்றன.

நாளொன்றுக்கு, 1.45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், 1.75 லட்சம் லிட்டர் வரை தேவைப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.பணம் பட்டுவாடா தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில், சமீபத்தில் துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பால் உற்பத்தியை 20 சதவீதம் அதிகப்படுத்த உத்தரவிட்டதோடு, விற்பனைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.


இதுகுறித்து,, கோவை ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கூறியதாவது:பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை பணம் வழங்குவதோடு, கொள்முதலை அதிகரிப்பதற்கான பணி துவக்கப்பட்டிருக்கிறது.


பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்ததால், நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில், கோவை மாவட்டத்தில் மட்டும், 25 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன், ஒரே நாளில், 2 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டது. தற்போது, 1.96 லட்சம் லிட்டர் விற்கப்படுகிறது.


கூடுதல் தேவையை சமாளிக்க, திருப்பூரில் இருந்து தருவிக்கப்படுகிறது.இதை தவிர்க்க, கோவை மாவட்ட விவசாயிகளிடம் ஆண்டு முழுவதும் தடையின்றி பால் கொள்முதல் செய்ய, தமிழக அரசு அறிவுரை வழங்கியிருக்கிறது. கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தாது உப்பு கலவை வழங்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X