விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி: பிரதமர்

Updated : ஏப் 10, 2022 | Added : ஏப் 10, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: விவசாயம் தொடர்பான திட்டங்களினால், விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகளினால் நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும். பிரதமர் கிசான் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்களினால்
farmers, primeminister,modi, narendramodi, விவசாயிகள், பிரதமர், மோடி, நரேந்திரமோடி

புதுடில்லி: விவசாயம் தொடர்பான திட்டங்களினால், விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:


விவசாயிகளினால் நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும். பிரதமர் கிசான் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்களினால் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவதில் மிகழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.



மேலும், பிரதமர் வெளியிட்ட சில தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது: 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக 1.82 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் சம்மன் நிதியன் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் பலன் சிறு விவசாயிகளை சென்றடைந்துள்ளது.




latest tamil news


விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது. 11,632 திட்டங்களுக்கு ரூ.8.585 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளோம். தேசிய வேளாண் சந்தை(இ - நாம்) என்பது இந்தியாவில் விவசாய பொருட்களுக்கான ஆன்லைன் வளர்த்தக தளமாகும். இ நாம் தளத்தில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்து, ரூ.1.87 லட்சம் கோடி வர்த்தகம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (10)

Sandru - Chennai,இந்தியா
11-ஏப்-202209:18:44 IST Report Abuse
Sandru இதைத்தான் சாத்தான் வேதம் ஒதுகிறது என்பார்கள்.
Rate this:
Cancel
10-ஏப்-202221:58:07 IST Report Abuse
அப்புசாமி போடற கிசான் பிச்சையை நிறுத்துங்க. இல்லேன்னா ஒசத்திக் குடுங்க. விலைவாசி கிர்ருனு ஏறிடுச்சு.
Rate this:
Cancel
10-ஏப்-202220:26:02 IST Report Abuse
முருகன் திட்டங்கள் மட்டுமே .உதவி கிடைக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X