32 ஆயிரம் நிறுவனங்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு

Added : ஏப் 11, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை--அபாயகரமான கழிவுகள் உற்பத்தியாகும் 32 ஆயிரம் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் பல்வேறு வகையான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும்போது, அதில் எத்தகைய கழிவுகள் உருவாகும்; அதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--அபாயகரமான கழிவுகள் உற்பத்தியாகும் 32 ஆயிரம் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


நாடு முழுதும் பல்வேறு வகையான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும்போது, அதில் எத்தகைய கழிவுகள் உருவாகும்; அதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று ஆராயப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் தொழில் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுகிறது.

தவிர்க்க முடியாத சிலசமயங்களில், சுற்றுச்சூழலை பாதிக்கும் கழிவுகள் உருவாகும் என்று தெரிந்தும், கழிவு மேலாண்மைக்கான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.இதில், அபாயகரமான கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் தனியாக பட்டியலிடப்படுகின்றன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கண்காணிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news


இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:நாடு முழுதும் தற்போதைய நிலவரப்படி, 32 ஆயிரம் நிறுவனங்களில் அபாயகரமான கழிவுகள் உருவாவது தெரிய வந்துள்ளது. இந்நிறுவனங்களை கண்காணிப்பதற்காக தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில மாசு கட்டுப்பாட்டு நிறுவனங்கள், இந்த ஆலைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த வகை ஆலைகளில் மூலப்பொருட்கள் கொள்முதல், உற்பத்தித் திறன் ஆகியவற்றை தினசரி கண்காணிக்கவும், அபாயகரமான கழிவுகளை எவ்வாறு மேலாண்மை செய்கின்றன என்பதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும், இத்தகைய நிறுவனங்கள் குறித்த விபரங்களை, மத்திய அரசு முழுமையாக வெளியிட மறுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
11-ஏப்-202207:51:51 IST Report Abuse
G  Mahalingam சில அரசு அதிகாரிகள் கோடி கோடியாக லஞ்சம் வாங்கும் துறை இந்த சுற்று சூழல் துறை. இப்போது சிலர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் என்று போய் சொல்லி தொழில் அதிபரிடம் பணத்தை கரக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
11-ஏப்-202206:21:37 IST Report Abuse
Srivilliputtur S Ramesh வேலூர், ஆம்பூர், ஆரணி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளால், அங்கு உள்ள நிலத்தடி நீர் மட்டம் கீழே போய் விட்டது. குடிக்கும், குளிக்கும் நீர் யாவும் அமிலமயமாய் ஆகி விட்டது. இனி அங்கு மக்கள் குடியிருக்க முடியாது.....இது மிகப்பெரிய சமூக அநீதி...தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை முழுக்க ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது....~ அங்கு உள்ள எல்லா தோல் தொழிற்சாலைகளையும் அரசு மூட வேண்டும்.....~
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஏப்-202206:11:32 IST Report Abuse
Kasimani Baskaran இதில் மாசடைந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையும் சேர்ந்துக்கொள்ள வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X