‛தமிழ் தான் இணைப்பு மொழி': அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 11, 2022 | கருத்துகள் (386) | |
Advertisement
சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த ஹிந்தி தொடர்பான கருத்துக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛தமிழ் தான் இணைப்பு மொழி'' என கூறி உள்ளார்.தமிழகத்தில் அவ்வப்போது ஹிந்தி தொடர்பான சர்ச்சைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும்'' என
ARRahman, Tamil, Amitshah,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த ஹிந்தி தொடர்பான கருத்துக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛தமிழ் தான் இணைப்பு மொழி'' என கூறி உள்ளார்.

தமிழகத்தில் அவ்வப்போது ஹிந்தி தொடர்பான சர்ச்சைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும்'' என கூறினார். இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்து பதிவிட்டனர். ஒரு மொழியை கற்க நினைப்பது அவரவர் இஷ்டம். இதை ஏன் தடுக்க வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டனர். அதேசமயம் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு மொழியை கற்பது தவறல்ல, அதை திணிப்பதை தான் ஏற்க மாட்டோம் என பலரும் எதிர் கருத்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற திரைப்பிரபலங்கள் ஹிந்திக்கு எதிராக தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.


latest tamil news
குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்றுமுன்தினம், ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்'' என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, தமிழ்தாய் தமிழின் அடையாளமான ‛ழ' கரத்துடன் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. பலரும் இதை டிரெண்ட் செய்தனர்.


latest tamil news
இந்நிலையில் சென்னையில் நடக்கும் சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஹ்மான், ‛‛தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும். ஒரே இந்தியா தான். வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை'' என்றார். நிகழ்ச்சியை முடித்து திரும்பிய ரஹ்மானிடம் ‛‛இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு ‛தமிழ்தான் இணைப்பு மொழி' என்றார் ரஹ்மான். இவரின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (386)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
14-ஏப்-202218:59:35 IST Report Abuse
Ramesh M அதேபோல. உருதும் வேண்டாம் என சொல்ல முடியுமா திரு AR ரகுமான் அவ்ர்கள். உருத்தினால் தமிழ் அழியும் எனவே முஸ்லிம்கள் உருது படிப்பது கட்டாயம் இல்லை என உங்களால் கூற முடியுமா.
Rate this:
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
14-ஏப்-202218:55:06 IST Report Abuse
Ramesh M AR ரஹ்மான் முதலில் உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பீர்களா என கூறுங்கள். தெலுங்கு முஸ்லீம், ஹிந்தி முஸ்லீம், மலையாள முஸ்லீம் என நீங்கள் என்றாவது பிரித்து பார்த்ததுண்டா. உலகம் முழுவதும் உள்ள எல்லா முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் நீங்கள் அனைவரும் உருது பேசவேண்டும். அது சரி ஆனால் எங்கள் ஒற்றுமை மட்டும் பிரிக்க நினைப்பது ஏன்.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
13-ஏப்-202216:15:11 IST Report Abuse
rmr திலிப் என்ற பெயர் தான இவருக்கு ஏதாச்சும் ஆதாயம் கிடைக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவானுங்க , ஹிந்தி வேண்டாம்னு சொல்லுவானுங்க அண்ணா நல்லா ஹிந்தி பேசுவானுங்க பொய் பொய் பொய் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அவசியம் இல்லை
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14-ஏப்-202203:16:02 IST Report Abuse
meenakshisundaramஇந்த காளியின் உருவதைத்தான் ரெஹ்மான் தினம் வணங்குகிறாரா ?அவர் மதம் மாறிய ப்ராமணநா இல்லை தீவிர முஸ்லிமா என்ற ஐயத்தை கிளப்பி விட்டுவிட்டார்.ஏதாவது ஒரு நெறி முறையை பின் பற்றினால் நல்லதே.ரசிகர்களும் ஒருவரின் ஒரு சில திறமையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அந்த நபர் உலகிலின் எல்லா துறைகளிலும் திறன் கொண்டவர் என்றோ இல்லை அவர் கூறுவதே வேத வாக்கு என்ற எடுத்துக்கொள்வதா ?அந்த நபர் தனது வசதிக்கேற்ப கிடைத்த நர் பெயரை மற்ற பொது னல விஷயங்களிலும் மூக்கை நுழைப்பது முதிர்ச்சி குறைவின்மையையும் சுயநலத்தையும் காட்டுகிறது .தமிழர்கள் தங்களுக்கு எது நல்லது என்று புரிந்து கொண்டு வாழ்வதே நல்லது மாற்றப்படி இந்தியாவில் உள்ள மற்ற மொழிகள் மாநிலத்தவர் குறைவாக மதிப்பிடுவதோ ஏளனம் செய்வதோ எந்த வகையில் நியாயம் .?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X