சசி நீக்கம் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு: எடப்பாடி ‛‛குஷி''

Updated : ஏப் 11, 2022 | Added : ஏப் 11, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
சென்னை: சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் ஏற்று கொள்ளப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் ஏற்று கொள்ளப்பட்டது.latest tamil news


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடந்து வருகிறது. இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில்,


latest tamil news


மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சசிகலா பொதுசெயலாளராக ஒரு கூட்டத்தையும் கூட்டாதது கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும் ,இது தொடர்பாக அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த தீர்மானமும் செல்லும் என்றும் நீதிபதி ஸ்ரீ தேவி உத்தரவிட்டுள்ளார்.மீண்டும் அதிமுகவுக்குள் நுழைய சசிகலா, பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். ஊர், ஊராக டூர் போனார். கட்சியினருடன் அவ்வப்போது போனில் பேசி, ‛ஆடியோ'வை வெளியிட்டார். இதனால், அவர் அதிமுகவை கைப்பற்றி விடுவாரோ என்ற அச்சம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்றோருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவால், மீண்டும் கட்சிக்குள் சசிகலா நுழையும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இது, எடப்பாடி போன்றோருக்கு ‛குஷி'யை ஏற்படுத்து உள்ளது.


மேல்முறையீடு

இதற்கிடையில் நாமக்கல்லில் சசிகலா கூறும்போது, ‛‛ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202200:17:27 IST Report Abuse
அப்புசாமி கூழை கும்புடு போட்டு மேலே வந்தவங்க ரொம்ப நல்லவங்க....
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
11-ஏப்-202221:49:38 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இனிமேலாவது திருந்தாவிடில், உள்ளதெல்லாம் இழந்து பழைய நிலைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-202210:18:35 IST Report Abuse
Sivramkrishnan Gkஇப்போ வீடியோ கேசட் கிடையாது. எல்லாமே ஆன்லைனில் பார்க்க முடியும். அதாவது பழைய நிலைக்கும் சான்ஸ் இல்லை....
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
11-ஏப்-202218:16:55 IST Report Abuse
sangu தர்மம் வென்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X