முதலில் வாழ்க்கை வசப்படட்டும்...

Updated : ஏப் 11, 2022 | Added : ஏப் 11, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை அண்ணாநகர் மலர்க்குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் மலையென குவிந்துள்ள புத்தகங்களை தலைப்பு வாரியாக பிரித்து வைப்பதில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை அவர் நிறுவனராக இருந்து நடத்திவரும் கவிதை உறவு இலக்கிய அமைப்பின் ஆண்டு விழாவாக நடத்தி வருகிறார்.அந்த வகையில் வருகின்ற மே 18 ம் தேதி வரும் அவரது 75 வதுlatest tamil news

சென்னை அண்ணாநகர் மலர்க்குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் மலையென குவிந்துள்ள புத்தகங்களை தலைப்பு வாரியாக பிரித்து வைப்பதில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்


ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை அவர் நிறுவனராக இருந்து நடத்திவரும் கவிதை உறவு இலக்கிய அமைப்பின் ஆண்டு விழாவாக நடத்தி வருகிறார்.


அந்த வகையில் வருகின்ற மே 18 ம் தேதி வரும் அவரது 75 வது பிறந்த தினவிழாவை ,கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 50 வது ஆண்டு விழாவாக நடத்த உள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் சிறந்த கதை,கவிதை,நாவல்,கட்டுரை போன்ற புத்தகங்களை தேர்ந்து எடுத்து அதை எழுதிய ஆசிரியர்களை பாராட்டி கவுரவிப்பதுதான் கவிதை உறவு அமைப்பின் ஆண்டு விழாவின் சிறப்பாகும்.


latest tamil news

கொரோனா காலத்திலும் நிறைய எழுத்தாளர்கள் பல தரமான படைப்புகளை தந்துள்ளனர் இலக்கியம்தான் மனதை செம்மைப்படுத்தும் வாழ்க்கையை வசப்படுத்தும்.


உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன்


நான் பாங்க் அதிகாரியாக பணியாற்றிய போது ஒரு கவியரங்கத்திற்கு எனது வாகனத்தில் போய்க்கொண்டு இருந்தேன் அப்போது ஒரு சிக்னலில் இருந்த போலீஸ் அதிகாரியால் தேவையின்றி நிறுத்தப்பட்டேன், அவர் என்னைப் பேசவே விடாமல் ஏக வசனத்தில் மரியாதைக்குறைவான வார்த்தையில் பேசினார்.


என் தரப்பு நியாயத்தை கேட்காமல், உணராமல் இப்படி ஒருவர் பேசுகிறாரே என மனம் வலித்தது, நடந்த சம்பவத்தை போலீஸ் உயரதிகாரியிடம் பகிர்ந்து கொண்டேன், அவர் மிகவும் வருத்தமுற்று இப்படிப்பட்ட சிலரால்தான் காவல்துறையின் கண்ணியத்திற்கு கெட்ட பெயர் வருகிறது என்றவர்,‛ சரி நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார்.


மறுநாள் காலை, என்னை ஏக வசனத்தில் பேசிய போலீஸ் அதிகாரி எனது அலுவலகத்திற்கு வந்தார், என்னை சந்தித்து குனிந்த தலையோடு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார் அவரை வரவேற்று உட்காரச் சொல்லி காபி கொடுத்து உபசரித்தேன்.


உங்களை இங்கு வரவழைப்பதோ,மன்னிப்பு கேட்க வைப்பதோ எனது நோக்கமல்ல அது எனது விருப்பமுமல்ல ஆனால் என் மகனின் வயதில் இருக்கும் நீங்கள் ஒரு தந்தையைப் போன்ற நிலையில் உள்ள என் வயதையோ, பொறுப்பையோ பொருட்படுத்தாமல் நடந்து கொண்டீர்கள்.


நான் இருந்த இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் உங்களை மோசமாக நடத்தியிருப்பார்கள் ஆகவே பொறுமையை கையாளுங்கள் பொதுமக்களிடம் நட்பு பராட்டுங்கள் என்று அறிவுரை சொல்லி நான் எழுதிய பத்து புத்தகங்கை பரிசாக கொடுத்து அனுப்பினேன்.


அதன்பிறகு அவரது வாழ்க்கை நடைமுறையே மாறிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.


ஆகவே நமது வாழ்வியல் முறையில் வானத்தை வசப்படுத்துவதை விட முதலில் வாழ்க்கையை வசப்படுத்துவோம் வளமாக வாழ்வோம் என்றார்.


-எல்.முருகராஜ்புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (6)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-ஏப்-202203:02:59 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் அய்யா
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-202220:50:27 IST Report Abuse
Bhaskaran நான் வழக்கமாக செல்லும் நூலகத்தில் பதிவேடுப்பார்த்தேன் வருகைதந்தவர்கள் பதினொருபேர் நூல் இரவல் வாங்கியவர் ஒருவர் .அரசு நூலக வளர்ச்சிக்காக பலநூறு கோடி செலவு செய்யும்போது மக்கள் பயன்படுத்தாது மிகவும் வருத்தத்துக்கு உரியது .மாணவர்களுக்கு பொது அறிவு எப்படி வளரும்
Rate this:
Cancel
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
14-ஏப்-202211:18:52 IST Report Abuse
sundaram sadagopan வாழ்த்துக்கள் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் . உங்கள் நற்பணி தொடரட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X