மாமூல் கொட்டும் 'பார்'; ஆளுங்கட்சி பிரமுகர் 'தர்பார்!'

Added : ஏப் 12, 2022 | |
Advertisement
''திருப்பூர்ல மதுக்கடை பெருகிப்போச்சு... இளைஞர்கள் பலர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாயிட்டாங்க... மது பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளர்களோட பணித்திறன் பாதிக்குதுன்னு தொழில் அமைப்பினர் சொல்லிட்டு இருக்காங்க... ஆனா, அதிகாலைல இருந்து நள்ளிரவு வரைக்கும் திருப்பூர்ல மது தாராளமா கிடைக்குது'' என்று ஆதங்கத்துடன் பேசத் துவங்கினாள் மித்ரா.''மித்து... இதுக்கு பின்னணில
 மாமூல் கொட்டும் 'பார்'; ஆளுங்கட்சி பிரமுகர் 'தர்பார்!'

''திருப்பூர்ல மதுக்கடை பெருகிப்போச்சு... இளைஞர்கள் பலர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாயிட்டாங்க... மது பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளர்களோட பணித்திறன் பாதிக்குதுன்னு தொழில் அமைப்பினர் சொல்லிட்டு இருக்காங்க... ஆனா, அதிகாலைல இருந்து நள்ளிரவு வரைக்கும் திருப்பூர்ல மது தாராளமா கிடைக்குது'' என்று ஆதங்கத்துடன் பேசத் துவங்கினாள் மித்ரா.''மித்து...
இதுக்கு பின்னணில இருக்கிற காரணத்தையும் பார்க்கணும்... சிட்டி லிமிட்ல, 80 டாஸ்மாக் பார்கள் இருக்காம். இதுல, ஆளுங்கட்சியோட மத்திய மாவட்ட எல்லைக்குள்ள மட்டும், 50 கடைங்க இருக்காம். இந்த பார் காரங்களையெல்லாம் கூப்பிட்டு, மீட்டிங் போட்ட, ஆளுங்கட்சி வி.ஐ.பி., ரெண்டு பேரை அறிமுகம் செஞ்சு வைச்சு, பார் காரங்க எல்லாம் இனி, அவங்க ரெண்டு பேரு சொல்றததான் கேட்கணும்ன்னு சொல்லியிருக்காரு.''பார் காரங்க ஒவ்வொருத்தரும், மாசந்தோறும் 3.50 லட்சம் ரூபாய் மாமூல் கொடுத்துடணும்; அப்படி கொடுக்க முடியலைன்னா, கடையை விட்டுடுங்கன்னு, கண்டிப்பா சொல்லிட்டாங்களாம். அப்படியே 'ஷாக்' ஆகிட்டாங்களாம், 'பார்'காரங்க. போன ஆட்சியில மாசாமாசம், 30 ஆயிரத்துல இருந்து, 60 ஆயிரம் ரூபா வரைக்கும் தான் படியளந்தோம். இவங்க என்னடான்னா, இவ்வளவு பெரிய தொகை கேட்கிறாங்களே. அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு புலம்பிட்டு இருக்காங்களாம். இந்த விஷயமா, சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திச்சு பேசவும் தயாராகிட்டு இருக்காங்களாம். இதுல என்ன கொடுமைன்னா, அந்த ரெண்டு பேத்துல ஒருத்தரு, போலி பாஸ்போர்ட் தயாரிச்சு கொடுத்த வழக்குல, ஜெயிலுக்கு போயிட்டு வந்தவராம்... இதனால், சிட்டிக்குள்ள இருக்கிற பார் காரங்க தொழிலை மாத்திடலாம்னு இருக்காங்களாம்... மாமூல் இப்படிக் கொட்டிக்கொடுத்தா, அதிகாலைலயே மது ஆறாய் ஓடாம என்ன செய்யும்'' என 'பார்' ரகசியம் பகிர்ந்தாள் சித்ரா.''அந்த ஏரியாவுல எனக்கு தெரிஞ்ச, மோகன், சதீஷ்னு ரெண்டு அண்ணாங்க இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டா விஷயம் தெரியும்'' என, ஆர்வம் கொண்டாள், மித்ரா.''இதே மாதிரி தான், மாவட்டத்துல இருக்கிற குவாரிக்காரங்களும், தொழிலை மாத்த முடிவு பண்ணிட்டாங்களாம். மாசந்தோறும் அவங்க, அதிகாரிகளுக்கு மாமூல் தருவாங்க. இப்ப, ஆளுங்கட்சிகாரங்களும் மாமூல் வாங்க, வரிசை கட்டி நிக்கிறாங்களாம். அதுமட்டுமில்லாம, சில 'லெட்டர்பேடு' அமைப்புகளும், மாமூல் கேட்டு நச்சரிக்கிறாங்களாம். தங்களை 'கவனிக்காத' குவாரிகாரங்க மேல, கோர்ட் வரைக்கும் போய் வழக்கு போடறாங்களாம்.
''ஈரோட்டுல இருந்து கூட இங்க வந்து, குவாரில கல்லா கட்றாங்கன்னு, நம்ம பாஸ்கரன் அண்ணா கூட சொன்னாரு... ஒரு அமைப்பின் நிறுவனர்னு, அவரோட லெட்டர் பேடுல இருக்காம்,'' என, அடுத்த விஷயத்தை பகிர்ந்தாள் சித்ரா.தி.மு.க., நோட்டீஸில்காங்., கவுன்சிலர் பெயர்''அவிநாசியில, ரெண்டு நாள் முன்னாடி தி.மு.க., சார்பில் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் நடந்துச்சு. இதுதொடர்பா கட்சிக்காரங்க அச்சிட்ட நோட்டீஸ்ல, பேரூராட்சியில இருக்கிற தி.மு.க., கவுன்சிலருங்க பேரோட, காங்கிரஸ் கவுன்சிலருங்க கருணாம்பாள், கோபாலகிருஷ்ணன் பேரும் இருந்திருக்கு. தி.மு.க., நடத்துற கூட்டத்துல, காங்கிரஸ் கவுன்சிலருங்க பேரை போட்டது சர்ச்சையானதால, அந்த ரெண்டு பேரையும், பேனாவால அழிச்சு விட்டுட்டு, மக்கள்கிட்ட வினியோகம் செஞ்சிருக்காங்க'' எனக்கூறி நகைத்தாள் மித்ரா.''பேரூராட்சி எல்லைல இருக்கிற அறிவிப்பு பலகைல, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர் பேரை எழுதியிருக்காங்க. முதல் தடவை தலைவர் பேரை பெரிசாவும், துணைத்தலைவர் பேரை சிறுசாவும் எழுதிட்டாங்க. அதுக்கு அப்புறமா அதை திரும்பவும் அழிச்சு, ரெண்டு பேரையும் சரி சமமா எழுதியிருக்காங்க. திரும்பவும் அதை அழிச்சு, தலைவரு பேரை கொஞ்சம் பெரிசா எழுதியிருக்காங்க. செயல் அலுவலர் பேரை, ஒரு மூலையில கண்ணுக்கு தெரிஞ்சும், தெரியாத மாதிரி எழுதிட்டாங்க.பேரை எழுதவே இவ்வளவு குழம்பினா எப்படி நிர்வாகத்தை நடத்தப்போறாங்கன்னு தெரியலையே'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.''பாதை இருந்தும் பயன்படுத்த முடியாம தவிக்கிறாங்க வீரபாண்டி, கரைப்புதுார் எல்லையில இருக்கிற மக்கள், பொது வழித்தடத்தை ஆக்கிரமிச்சு வச்சிருக்கிறவருக்கு ஆதரவா, மாஜி வி.ஐ.பி., இருந்தாரு. அதனால போன ஆட்சியில அரைகுறையா ஆக்கிரமிப்பை எடுத்துட்டு விட்டுட்டாங்க. இப்போ ஆட்சி மாறியும் அங்க இருக்கிற ஆக்கிரமிப்பை அகற்றி, அங்க ரோடு போட அதிகாரிங்க தயக்கம் காட்றாங்க.
அந்த இடம் தங்களோட எல்லையில இல்லைன்னு, வருவாய்த்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் மாறி, மாறி சொல்லிக்கிறாங்களாம்'' என்று, மித்ரா சங்கடப்பட்டாள்.'கருப்பு ஆடு'களால்தப்பும் கஞ்சா ஆசாமிகள்''ரயில்வே டி.ஜி.பி., உத்தரவுக்கு அப்புறமா, ரயில்கள்ல கஞ்சா, பான் மசாலா கொண்டு வருவது தொடர்பா, ரயில்வே போலீஸ்காரங்க சோதனை பண்றாங்க. ஆரம்பத்துல, கஞ்சா எடுத்துட்டு வந்தவங்கள கையும், களவுமா பிடிச்ச போலீஸ்காரங்க, இப்பல்லாம் கஞ்சாவை மட்டும் பிடிக்கிறாங்களாம்; ஆட்களை பிடிக்கறது இல்லையாம். சோதனை போடறப்போ, கஞ்சா பொட்டலம் மட்டும் தான், இருந்துச்சு; அங்க யாரையும் காணோம்ன்னு சொல்றாங்களாம். ரெய்டு வர்ற சமாசாரத்தை முன்னாடியே சொல்லி தப்பிக்க விட்றாங்களோ... அப்படீன்னா அந்த 'கறுப்பு ஆடு' யாருன்னு கண்டுபிடிக்கணும்,'' என 'நச்'சென்று சொன்னாள் சித்ரா.''இதாச்சும் பரவால்ல. திருப்பூர் அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம், கோவை மண்டல பொறுப்பாளரா இருக்கிற முன்னாள் அமைச்சர் சண்முகவேலு தலைமைல நடந்துச்சு. அவர் ஆர்ப்பாட்டத்த துவக்க தயாரானப்போ, 'அண்ணா இன்னும், அன்னுார் பகுதி செயலாளர்ங்க வரல' என ஒருவர் குரல் கொடுக்க, பக்கத்துல இருந்த டீக்கடைக்குள், தனது சகாக்களுடன் நுழைந்த மண்டல பொறுப்பாளர், காபி சாப்பிட்டார். அரை மணிநேரம் கழிச்சு அன்னுார் நிர்வாகிங்க வந்த பிறகு தான், கூட்டம் துவங்குச்சு,'' என்று சித்ரா கூறியதும், ''கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆனக்கதைதான் போ'' என, நையாண்டி செய்தாள் மித்ரா.'ரிவார்டு' தரும் அதிகாரி''மாசா மாசம், எதிர்பாராம கிடைக்கிற அன்பளிப்புல, இன்ப அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம் சிட்டி போலீஸ்காரங்க...
''போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தேவையான ஸ்டேஷனரி, டீ, காபி செலவு அரசாங்கம் மூலமா தனியா நிதி ஒதுக்கிறாங்களாம். ஆனா, போலீஸ் ஸ்டேஷன்கள்ல, இந்த செலவையெல்லாம் ஈடுகட்ட பெரிய இடங்கள்ல இருந்து நன்கொடை வாங்கு வாங்களாம். அதே மாதிரி, நல்லா வேல செய்ற போலீஸ்காரங்களுக்கு ஊக்கத்தொகை தர்றதுக்குன்னும் ஒரு தொகை ஒதுக்குவாங்களாம். ஆனா, யாருக்கும் ஊக்கத்தொகை தந்த மாதிரியே தெரியலையாம். ஆனா, புதுசா வந்திருக்கிற பெரிய ஆபீசர், அரசாங்கம் ஒதுக்கிற தொகையை, எது, எதுக்கு பயன்படுத்தணுமோ, அது, அதுக்கு சரியாக பயன்படுத்துறாராம். நல்லா வேலை செய்ற போலீஸ்காரங்களுக்கு 500, 750, 1,000 ரூபாய்ன்னு 'ரிவார்டு' வேற தர்றாராம். இதனால, ரகசிய போலீஸ் வேல செய்ற ஆபீஸ்ல ஏ.சி., இல்லாம, வெயில்ல ரொம்ப சிரமப்பட்டிருக்காங்க. இந்த தொகைல, ஒரு ஏ.சி., கூட வாங்கி போட்டிருக்காரு'' என்று பெருமிதம் கொண்டாள் சித்ரா.''ஓ... அப்படியா... எனக்கே இந்த விஷயங்களக் கேக்றப்ப, ஆச்சர்யமா இருக்கு, போலீஸ்காரங்களுக்கு இருக்காதா என்ன? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க அக்கா. அதே மாதிரி, வடக்கு பகுதியில, லாட்டரி விற்பனை அதிகமா இருக்காம். எல்.ஜி., கிரவுண்ட், ஒரு வாட்டர் சர்வீஸ், ஒரு மருந்துக்கடை பின்புறம்னு, லாட்டரி விற்பனை ஜோரா நடக்குதாம். லாட்டரி விக்கிறவங்க, டோக்கன் கொடுத்துடறாங்க.
அடுத்த நாள், டோக்கன் நம்பரை சொல்லி, ரிசல்ட் என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு போயிடறாங்க. லாட்டரி விக்கிறவங்களும், வாங்கறவங்களும், தங்களை யாரும் அடையாளம் பார்த்துட கூடாதுன்னு, கலர், கலர் தொப்பியில வர்றாங்களாம்'' என, நடந்ததை பார்த்த மாதிரியே ஒப்புவித்தாள் மித்ரா.''இதை தடுக்கவும் பெரிய ஆபீசர் நடவடிக்கை எடுத்தார்ன்னா தேவல,'' என கோரிக்கையை முன்வைத்தாள் சித்ரா.'உச்சி வெயில் மண்டைய பிளக்குது... ஜில்லுன்னு முலாம்பழ ஜூஸ் போட்டுட்டு வர்றேன்'' என்ற சித்ராவைப் பார்த்து, வேகமாக தலையசைத்தாள் மித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X