ஆனைகட்டியில் நடக்குது வேட்டை... சமூக விரோத செயல்களின் பேட்டை!

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 12, 2022 | |
Advertisement
ஏப்ரலில் இதமான கிளைமேட்டைப் பார்த்ததும் குஷியான மித்ரா, சித்ராவையும் கிளப்பிக் கொண்டு, ஆனைகட்டிக்கு வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தாள். கணுவாய் தாண்டியதும் லேசான சாரல் மழை, முகத்தை நனைக்க, உற்சாகத்தோடு பேசினாள் சித்ரா...''மித்து! முன்னெல்லாம் இந்த ரோட்டுல டூ வீலர்ல வரவே பயமாயிருக்கும். எம வேகத்துல வர்ற செங்கல் லாரி, முகமெல்லாம் புழுதியைப் பூசுற துாசின்னு...இப்பிடி
 ஆனைகட்டியில் நடக்குது வேட்டை... சமூக விரோத செயல்களின் பேட்டை!

ஏப்ரலில் இதமான கிளைமேட்டைப் பார்த்ததும் குஷியான மித்ரா, சித்ராவையும் கிளப்பிக் கொண்டு, ஆனைகட்டிக்கு வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தாள். கணுவாய் தாண்டியதும் லேசான சாரல் மழை, முகத்தை நனைக்க, உற்சாகத்தோடு பேசினாள் சித்ரா...''மித்து! முன்னெல்லாம் இந்த ரோட்டுல டூ வீலர்ல வரவே பயமாயிருக்கும். எம வேகத்துல வர்ற செங்கல் லாரி, முகமெல்லாம் புழுதியைப் பூசுற துாசின்னு...
இப்பிடி ஒரு கிளைமேட்ல டூ வீலர்ல போறதுக்கு, எவ்ளோ நல்லா இருக்கு...இதெல்லாம் நீடிக்குமா?''''இங்க இருக்குற சூளையெல்லாம் மூடிட்டாங்க...ஆனா நம்ம ஊருலயே மேற்குத் தொடர்ச்சி மலையோட மத்த ஏரியாவுல மண் அள்ள ஆரம்பிச்சிட்டாங்க. சூளைகளும் ஜோரா நடக்குது. ''ஆனா ஒரு சூளைக்கும் 'பர்மிஷன்' இல்லைன்னு சொல்றாங்க!'' என்றாள் மித்ரா.அவளே தொடர்ந்தாள்...''எட்டிமடை, மாவுத்தம்பதி, முருகம்பதி, அய்யம்பதின்னு, தமிழ்நாடு-கேரளா பார்டர் ஏரியாவுல யானை வர்ற தடத்துலதான் இது அதிகமா நடக்குது. மைன்ஸ்ல இருக்குற முக்கிய அதிகாரிக்கு, லட்சங்கள்ல லஞ்சம் போயிட்டு இருக்காம்...அவருக்கு மட்டுமில்லை. தாசில்தாரு, ஏரியாவுல இருக்குற சேர்மன், பிரசிடெண்ட், கவுன்சிலர், கடைநிலை ஊழியர்கள் அத்தனை பேருக்கும் மாமூல் போகுது!''''கலெக்டருக்கு இதெல்லாம் தெரியாதா?''''அவர்ட்ட 50 நாளைக்கு முன்னாடியே, எல்லா சூளைகளையும் மூடியாச்சுன்னு ரிப்போர்ட் கொடுத்திருக்காரு மைன்ஸ் ஆபீசர்...ஸ்பெஷல் டீமை அனுப்பி, செக் பண்றேன்னு சொன்ன கலெக்டரும் அதைக் கண்டுக்கலை. அந்த ஏரியாவுக்கு, ஆளும்கட்சி கொடியோட கார்ல போன ஒருத்தரு, 'யாரும் பயப்பட வேணாம்...எல்லார்ட்டயும் நான் சொல்லிட்டேன்'னு சொல்லி, அவர் பங்கையும் வாங்கிட்டுப் போயிட்டாராம்!''மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஏழெட்டு பைக்குகளில் இளைஞர் கூட்டம், அசுர வேகத்தில் கடந்து சென்றது. அதைப் பார்த்த சித்ரா, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...''மித்து! ஆனைகட்டியில ரிசார்ட்ஸ்ங்கிற பேருல நடக்குற கூத்துக்கு ஒரு அளவே இல்லைங்கிறாங்க...'பார்' லைசென்சே இல்லாம, எல்லா ரிசார்ட்லயும் எல்லா சரக்கும் விக்கிறாங்களாம்.
யானை வழித்தடத்துல ராத்திரியெல்லாம் ஆட்டம் பாட்டம்தானாம்!''''அது மட்டுமில்லைக்கா...அங்க வந்து தங்குற இந்த மாதிரி பசங்களுக்கு, காட்டு முயலு எல்லாம் அடிச்சு சமைச்சுத் தர்றாங்களாம். ஒரு பிளேட் ஆயிரம் ரூபாயாம். பாரஸ்ட் ஆபீசர் யாருமே கண்டுக்கிறதில்லை. ஏன்னா அவுங்களுக்கும் அங்க இலவசமா எல்லாமே 'சப்ளை' நடக்குதாம். அதோட மாமூலும் கொடுத்துர்றாங்களாம்...!''''இப்போ புதுசா 'ஹோம் ஸ்டே'ன்னு சொல்லி, லாரிகளோட கன்டெய்னர்ல ரூம் மாதிரி 'செட்' பண்ணி, பக்கத்துல இருக்குற வீடுகள்ல இருந்து சமைச்சுக் கொடுக்குறாங்களாம். அந்த கன்டெய்னர்ல நடக்காத வேலையே இல்லையாம்!'''புது எஸ்.பி., வந்த பிறகும், ரூரல் ஏரியாவுல இந்த கஞ்சா, போதை விஷயம் எதுவுமே குறைஞ்சது மாதிரித் தெரியலைக்கா... கோவில்பாளையம் போலீஸ் லிமிட்ல ஒரு பேக்டரியில வேலை பாக்குற ரெண்டு வடமாநிலத் தொழிலாளர்கள் கஞ்சாவோட பிடிபட்ருக்காங்க. ஆனா அந்த கம்பெனிக்காரங்க செல்வாக்குல கேஸ் போடுறப்போ, அது வெறும் புகையிலைன்னு மாறிருச்சாம்!''மித்ரா சொல்லிக் கொண்டிருந்தபோது, தி.மு.க., கொடியுடன் கடந்த ஒரு காரைப் பார்த்ததும் சித்ரா, ''மித்து! நேத்து நடந்த கோவை மாநகராட்சி முதல் கவுன்சில் மீட்டிங்கே ஒரு களேபரமாத்தான் நடந்திருக்கு... அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அஜெண்டாவெல்லாம் கிழிச்சிருக்காங்க. அதுலதான் ஒரே தள்ளுமுள்ளு ஆகியிருக்கு...''''ஓ...ஆரம்பமே அதகளமா?''''ஆமா...முதல் மீட்டிங்லயே மேயர் ஓரளவுக்கு நல்லாத்தான் 'டீல்' பண்ணுனாங்க...ரொம்ப நேரம் பேசுன மீனா லோகுவை, 'அடுத்தவுங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க'ன்னு நாசூக்கா சொல்லி உட்கார வச்சிட்டாங்க,'' ''அக்கா! தி.மு.க.,வை பத்திப் பேசுனதும் முக்கியமான மேட்டர் ஞாபகம் வந்துச்சு...தி.மு.க.,வுல இருந்து நீக்கப்பட்ட அந்த நிர்வாகி, சமீபத்துல துபாய் போயிருக்காங்க.
''அவுங்களுக்கு அக்கவுன்டண்ட் மாதிரி இருக்குற 'மாஜி' மண்டலமும் கூடப் போயிருக்காரு. அங்க போயி, நம்ம ஊருல 'பவர்புல்'லா இருந்த எதிர்க்கட்சி 'மாஜி'யோட அண்ணன், தம்பியைச் சந்திச்சு பிஸினஸ் பேசிருக்காங்களாம்!''''என்ன மித்து சொல்ற...'ஷாக்' ஆன தகவலா இருக்கு!''''ஆமாக்கா...கோயம்புத்துார்ல 'மாஜி' குடும்பத்துக்கிட்ட இருக்குற பல நுாறு ஏக்கர் நிலங்களை, இப்போ கோவையில கோடிகளைக் கொட்டி நிலம் வாங்குற, ஒரு சென்னை கம்பெனிக்கு மாத்தி விடுறது சம்பந்தமா பேசுனதாத் தகவல்...அதுக்கு இவுங்கதான் மீடியேட்டரா பேசுறாங்க. இங்க பேசுனா தெரிஞ்சிடும்னு, அங்க போயி பேசிருக்காங்களாம்!''மித்ரா பேசிக் கொண்டே, மாங்கரை செக்போஸ்ட் அருகே வண்டியை நிறுத்தி, அங்குள்ள கடையில் சுண்டல், சுக்கு மல்லிக் காபி ஆர்டர் கொடுத்தாள். சித்ரா அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...''மித்து! கார்ப்பரேஷன் ஆபீசர் சிட்டிக்குள்ள ரோடு போடுற இடங்களுக்கு, நடுராத்திரி, விடியற்காலைன்னு திடீர் திடீர்னு விசிட் அடிக்கிறாராம். எல்லா எக்யூப்மென்ட்டும் எடுத்துட்டுப் போயி, தோண்டித் துருவி எடுக்குறாராம். ஒரு சில இடங்கள்ல ரோடு சரியில்லைன்னு தெரிஞ்சதும், சம்பந்தப்பட்ட இன்ஜினியர்களை மண்டலம் விட்டு மண்டலம் மாத்திருக்காரு...
ஆபீசர்கள் ஆடிப்போயிருக்காங்க!''
பேசிக்கொண்டே இருவரும் சுண்டல், சுக்குமல்லியைக் காலி செய்து விட்டு, பணத்தைக் கொடுத்து விட்டு, பயணத்தைத் தொடர்ந்தனர். எதிரில் கடந்த ஆம்புலன்சைப் பார்த்ததும் மித்ரா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்...''அக்கா! கோவில்பட்டி ஜி.எச்.,ல காலை மாத்தி ஆபரேஷன் பண்ணுனது போல, நம்ம ஜி.எச்.,லயும், ஒரு சம்பவம் நடந்திருக்கு...மூளையில கட்டின்னு நரம்பியல் பிரிவுல ஒருத்தர் 'அட்மிட்' ஆகியிருக்காரு. அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்திருக்காங்க. அவுங்க கொடுத்த பரிசோதனை முடிவுல வேற ஒரு பேஷன்ட் பேரு இருந்திருக்கு.''நல்லவேளை...ட்ரீட்மென்ட் கொடுக்கலியே!''''அதான் தெரியலை...ரிசல்ட்டை வாங்கிப் பார்த்த ஜி.எச்.,ஊழியர்கள், 'இது வேற ஒருத்தரோடது'ன்னு அசால்ட்டா சொல்லிட்டு, எல்லாத்தையும் பறிச்சிட்டுப் போயிட்டாங்களாம். இதைப் பத்தி டாக்டர்ட்ட கேட்டதுக்கு, 'அவருக்கு வந்த ரிசல்ட்படிதான் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கு'ன்னு சொல்லிருக்காங்க. ''இப்போ ரெண்டு பேஷன்ட் சொந்தக்காரங்களும் குழப்பத்துல இருக்காங்க!''''அடக்கொடுமையே....!''''அதைவிடக் கொடுமை, அங்க மார்ச்சுவரியில நடக்குதுக்கா... பிணத்தைக் கொடுக்க இவ்வளவு அமவுன்டுன்னு ரேட் பேசி, அதை வசூல் பண்றதுக்கு கான்ட்ராக்டல வேலை பாக்குற ஒரு ஆளையும் போட்ருக்காங்களாம்!''''கான்ட்ராக்ட்ல இருக்குற அவரு, கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ் ஊழியர்கள் அணியுற அடையாள அட்டையை அணிஞ்சிருக்காராம்.
''அவர்தான் ஒரு பொணத்துக்கு ரெண்டாயிரத்துல இருந்து அஞ்சாயிரம் வரைக்கும், மெரட்டி பறிக்கிறாராம். அதே மாதிரி தனியார் ஆம்புலன்ஸ்காரங்களும் அத்துமீறி உள்ள வர ஆரம்பிச்சிட்டாங்க...ஜீவன் போனாலும் சாந்தியில்லை!'சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வண்டியை மலைப்பாதையில் ஓரம் கட்டிய மித்ரா, கேமராவை எடுத்துக் கொண்டு 'ஜூம்' பண்ண ஆரம்பித்தாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X