'இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு கல்வி'

Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
திண்டுக்கல் : ''இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வி,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.திண்டுக்கல்லில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் அவர் பேசியதாவது:சுதந்திரம் பெறுவதற்கு முன், 12 சதவீதம் பட்டதாரிகளே இருந்தனர். சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளில் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா கணினி, தொழில்நுட்பம்
India, Education, NEET

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திண்டுக்கல் : ''இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வி,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.

திண்டுக்கல்லில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் அவர் பேசியதாவது:சுதந்திரம் பெறுவதற்கு முன், 12 சதவீதம் பட்டதாரிகளே இருந்தனர். சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளில் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா கணினி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஐ.டி., துறையில் இந்தியா, உலகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது. அதிக மக்கள் தொகை, சிறந்த பேராசிரியர்கள், நிறைய தலைவர்கள் இருக்கின்றனர். எனினும் வளரும் நாடாகவே இருக்கிறது. முழுமையான வளர்ச்சியை இன்னும் அடையவில்லை.131வது இடம்


இந்தியா முன்னேற்றம் அடைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில், 10 காரணங்களில் முதலாவதாக இருப்பது, கல்வியில் முன்னேற்றம் அடையாதது. இந்தியா முன்னேற, முதுகெலும்பாக கல்வி மட்டுமே இருக்க முடியும். கல்வி, சுகாதாரம், வருமானம் அடிப்படையில் 180 நாடுகளில், இந்தியா 131வது இடத்தில் உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் சீனாவின் வருமானம் சமமாக இருந்தது. இன்று சீனாவின் வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கல்வியின் தரம் தான். தமிழகம் கல்வியில் 22வது இடமாக பின்தங்கியுள்ளது. இதற்கு, தற்போதைய கல்வி முறை தான் காரணம்.


latest tamil news

'நீட்'டால் சிறந்த டாக்டர்


இந்தியாவில், 35 ஆண்டுகளாக கல்வி கொள்கை அமல்படுத்தவில்லை. இப்போது தான் அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதன் நோக்கமே, இந்தியாவின் இளைய சமுதாயத்தை சிந்தனையாளர்கள், அறிவுடையவர்கள், நல்ல திறமைசாலிகளாக மாற்ற வேண்டும் என்பதாகும். இதுவரை வந்தவற்றில் சிறந்தது இந்த கல்விக் கொள்கை தான்.

கல்வியில் அரசியல் செய்ய கூடாது. 'நீட்' தேர்வு இருந்தால் மட்டுமே சிறந்த டாக்டர்களை கொண்டு வர முடியும். சிறு வயதிலேயே ஹிந்தி உட்பட பல மொழிகளை கற்க முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கல்வி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி, பேராசிரியர் குருவம்மாள், ஸ்ரீவி., கல்வி குழுமம் செயலர் பிரபாகரன், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநில அரசுக்கு அக்கறையில்லை!


கோவையில் நேற்று பாலகுருசாமி அளித்த பேட்டி:மாநில கல்விக் கொள்கையை வகுக்க, 13 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் பெரும்பாலான பரிந்துரைகள், நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டிருக்கும்.

குழுவில், மூத்தவர்கள், கல்வி செயல்முறை மற்றும் நிர்வாகத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் யாரும் இல்லை. பதிலாக, நீதித் துறையைச் சேர்ந்த ஒருவர், குழுவுக்கு தலைமை வகிக்கிறார். இக்குழு விசாரணை அல்லது உண்மையை கண்டறியும் குழு அல்ல. குழுவின் தலைவருக்கு கல்விப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் இருப்பது அவசியம்.

குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் கல்வி அனுபவம் இல்லாதவர்கள். மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் நபர்களே குழுவில் உள்ளனர். பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக உள்ளனர். இது, தரமான கல்வி கொள்கையை உருவாக்குவதில், மாநில அரசுக்கு அக்கறையின்மையை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
12-ஏப்-202213:33:22 IST Report Abuse
veeramani பேராசிரியர் பாலகுருசாமி கல்வி கொள்கைகைகளை தெளிவுபட சொல்லியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கப்யூட்டர் பிரிவு முன்னேற்றம் கண்டது இவரது காலத்தில்தான். தமிழகம் ஐ டீ துறையில் ஜொலிக்கிறது என்றால் காரணம் இவரு ஒருவர்.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-ஏப்-202213:23:32 IST Report Abuse
pattikkaattaan வடமாநிலங்கள் எல்லாம் கல்வியில் மிக முன்னேறியுள்ளன ... தமிழ்நாட்டு மக்கள் கல்வி கற்காமல் மிகவும் மிகவும் பின்தங்கி விட்டார்கள் ... பாவம் ..இனிமேலதான் பள்ளிக்கூடமே தொறக்கணும்
Rate this:
12-ஏப்-202215:33:47 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்சமச்சீர் டியர் .......... இவரு பேசுவது தரமான கல்வி பத்தி ......... அதாவது சமச்சீருடன் தொடர்பில்லாதது ..........
Rate this:
Cancel
Rajeswaran - chennai,இந்தியா
12-ஏப்-202212:36:43 IST Report Abuse
Rajeswaran கல்வி பற்றி கருத்துக்களை கூறதமிழ்நாட்டில் தகுதி உள்ளவர்கள் திரைத்துறையை சார்ந்த நபர்கள் மட்டுமே இது கூட உங்களுக்கு தெரியவில்லையே அய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X