ராகுலின் ராமர் பேச்சு பா.ஜ., கடும் தாக்கு

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி-ராமர் அவதாரம் குறித்து காங்.,- எம்.பி., ராகுல் பேசிய சர்ச்சை கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பொதுக் கூட்டமொன்றில் ராகுல் பேசும்போது, 'மறுபிறவியில் நம்பிக்கையில்லை எனும் பா.ஜ., தலைவர் ஒருவர், ராமர் அவதரித்ததாக எப்படி நம்புகிறார்' என கேள்வி கேட்டார். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:ராகுலுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-ராமர் அவதாரம் குறித்து காங்.,- எம்.பி., ராகுல் பேசிய சர்ச்சை கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news


சமீபத்தில் பொதுக் கூட்டமொன்றில் ராகுல் பேசும்போது, 'மறுபிறவியில் நம்பிக்கையில்லை எனும் பா.ஜ., தலைவர் ஒருவர், ராமர் அவதரித்ததாக எப்படி நம்புகிறார்' என கேள்வி கேட்டார். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:ராகுலுக்கு அரசியல் சாசனத்திலும் நம்பிக்கையில்லை, நீதி துறையிலும் நம்பிக்கையில்லை என்பதையே அவர் பேச்சு காட்டுகிறது.

ராமர் அவதாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பி இருப்பது விரக்தியின் வெளிப்பாடு. முந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 'ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரமில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தாய் சோனியா வழியை பின்பற்றி, ராகுலும் ராமரை விமர்சித்துள்ளார்.

சமீபத்திய தேர்தல் தோல்விகள், மக்கள் காங்கிரசுக்கு முடிவு கட்டியதை பறைசாற்றின.'ராமர் பிறந்திருக்கா விட்டால், பா.ஜ., எந்தப் பிரச்னையை கையிலெடுத்திருக்கும்' என சிவசேனா கட்சி தலைவரும், மஹா., முதல்வருமான உத்தவ் தாக்கரே கேட்டுள்ளார்.
இது போன்ற அற்பத்தனமான அரசியலும், பேச்சுக்களும் தான் சமீபத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


'அரசியலுக்கு வருவேன்'காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, உஜ்ஜைனி மஹாகலேஸ்வர் கோவிலில் பூஜை செய்த பின் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். மக்கள் தங்களுக்கு மாற்றம் வேண்டும் என விரும்பினால், அவர்களின் பிரதிநிதியாக என்னை கருதினால் நான் அரசியலில் நுழைவேன். அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும், என் அறக்கட்டளைப் பணிகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஏப்-202214:15:32 IST Report Abuse
Vena Suna ராகுல் ஒரு ஆள் என்று செய்தி போட வேண்டாம்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
12-ஏப்-202213:03:30 IST Report Abuse
Anand இவன் இன்னும் இந்நாட்டை விட்டு தொலையவில்லையா?
Rate this:
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
12-ஏப்-202212:02:25 IST Report Abuse
Nakkal Nadhamuni ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறியதாக செய்தி.. கொள்ளை அடித்து எல்லாவற்றையும் வெளிநாட்டில் முதலீடு செய்திருக்கும் ராஜபக்சே குடும்பம் போல, சோனியா, முக போன்ற குடும்பங்கள் எல்லாம் ஒரு நாள் நாட்டை விட்டு வெளியேறும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X