ராஜபக்சே உறவினர்கள் இலங்கையிலிருந்து 'எஸ்கேப்'

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இச்சூழ்நிலையில், அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார
இலங்கை, ராஜபக்ச, உறவினர்கள், எஸ்கேப், மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இச்சூழ்நிலையில், அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். நிதித்துறை உட்பட நான்கு துறைகளுக்கு மட்டும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி, இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9ம் தேதி துவங்கிய போராட்டம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போராட்டம் தீவிரமடைவதை அடுத்து, இலங்கை அரசு பொது விடுமுறை அறிவித்தது.இதனிடையே, அதிபர் மற்றும் பிரதமர் தவிர்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
latest tamil newsஇலங்கையில் துணை அமைச்சராக இருந்த நிருபமா ராஜபக்சே மற்றும் அவரது திருக்குமார் நடேசன் ஆகியோர் கடந்த வாரம் துபாய்க்கு கிளம்பி சென்றதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் மூலம் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. உலக தலைவர்களின் சொத்து விவரங்களை அம்பல படுத்திய 'பண்டோரா பேப்பர்ஸ்' எனும் ஆவணத்தில் நிருபமாவின்

பெயர் இடம்பெற்றுள்ளது. இவரும், திருக்குமார் நடேசனும் இணைந்து, போலி நிறுவனத்தின் மூலம் லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு பங்களாக்களை வாங்கியதாகவும், பல முதலீடுகளை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி மற்றும் இவரது பெற்றோர்களும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கிளம்பி சென்றுள்ளதாக தெரிகிறது. மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் நமல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கோத்தபயாவின் நெருங்கிய நண்பரும், அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிஸ்ஸங்க சேனாதிபதியும் இரவோடு இரவாக இலங்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இவர் மீதிருந்த முறைகேடு மற்றும் லஞ்ச வழக்குகளை கோத்தபயா அதிபரானதும் ரத்து செய்திருந்த நிலையில் மக்கள் போராட்டம் வெடிக்க துவங்கியதும், குடும்பத்தினரோடு இலங்கையிலிருந்து கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் இவர் செல்லும் போது, கண்காணிப்பு கேமராக்கள், மேலிட உத்தரவின் பேரில் செயலிழக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இலங்கையின் சென்ட்ரல் வங்கி தலைவர் அஜித் நிவாட் கப்ரால், வரும் 18 ம் தேதி வரை வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அமைச்சர்கள், தங்களின் குடும்பத்தினரோடு, சொகுசு ஓட்டல்களில் தங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஏப்-202212:00:16 IST Report Abuse
Ramesh Sargam இலங்கையில் பொருளாதார பிரச்சினை ஆரம்பித்த முதல் நாளே நான் கருத்து தெரிவித்தேன், இந்த ராஜபக்சே மற்றும் அவர் உறவினர்கள் இலங்கையிலிருந்து 'எஸ்கேப்' ஆவார்கள் என்றும், மற்றும் அதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிக்க வேண்டும் என்றும். யார் என் பேச்சை கேட்டார்கள்.
Rate this:
Cancel
12-ஏப்-202221:49:31 IST Report Abuse
அப்புசாமி எல்லோரும் லண்டனுக்கு தப்பிச்சு போயிடுங்க. மல்லையா, நீரவ் மோடி போன்ற ஆளுங்க அங்கேதான் சேஃபா இருக்காங்க. போரிஸ் ஜான்சன் சிறந்த பாதுகாப்பு குடுப்பாரு.
Rate this:
Cancel
Suresh kumar - Bangalore,இந்தியா
12-ஏப்-202221:40:50 IST Report Abuse
Suresh kumar எங்கள் இனத்தின் சாபம் சும்மா விடுமா ... ஊர விட்டு நீங்களும் ஓடி அகதி ஆகுங்கடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X