இந்தியாவில் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக கவனிக்கிறோம்: அமெரிக்கா

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
வாஷிங்டன்: இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. மேலும்,
US, Monitoring, India, Human Rights Violations, Concerning, Blinken, அமெரிக்கா, இந்தியா, மனித உரிமை மீறல்கள், கவனிப்பு, கண்காணிப்பு, பிளிங்கன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.,வில் ஓட்டெடுப்பு நடத்தியபோது, இந்தியா நடுநிலை வகித்தது. ரஷ்யா உடன் இந்தியா நீண்ட காலமாக நல்லுறவு பேணுவதால் இந்தியா நடுநிலை வகித்தது. இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், நேற்று (ஏப்.,11) பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலான சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை சந்தித்தனர்.


latest tamil news


இச்சந்திப்பை தொடர்ந்து நான்கு பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. மனித உரிமை உள்ளிட்ட பொதுவான விவகாரங்களில் நாங்கள் இந்தியா பற்றி தவறாமல் ஆலோசிப்போம். இந்தியாவில் சில அரசுகள், போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஏப்-202209:39:55 IST Report Abuse
பேசும் தமிழன் இந்தியாவில் இருப்பது போன்ற மனித உரிமைகள் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது.... இங்கு தான் நாட்டின் பிரதமருக்கு எதிராக go back என்றும் கருப்பு பலூன் பறக்க விடும் கூட்டம் உள்ளது... இதே போன்று உங்கள் நாட்டின் அதிபருக்கு எதிராக யாராவது நடந்தால்.. நீங்களும் உங்கள் அரசும் சும்மா இருக்குமா???
Rate this:
Cancel
Siva - Chennai,கனடா
13-ஏப்-202200:36:56 IST Report Abuse
Siva How to weaponize Human right violations for America's benefit? PS : Not applicable to America
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202200:23:50 IST Report Abuse
Mahesh இப்படி மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்தினால் அது அவர்களுக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X