வங்கி மோசடி: எகிப்தில் நீரவ் மோடியின் கூட்டாளி கைது

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பை ; பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில், எகிப்தில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி நீரவ் மோடியின் கூட்டாளி சுபாஷ் சங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மும்பை அழைத்து வந்தனர்.பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்த 2018 ம் ஆண்டு ரூ13,578 கோடி அளவுக்கு நடந்த மோசடி வெளியானது. இதில் தொடர்பு உள்ளதாக பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள்
Niravmodi,  cbi, cbiteam, cairo, PNB, punjab National bank, Subhashshankar,  நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிபிஐ, கெய்ரோ,  சுபாஷ் சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை ; பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில், எகிப்தில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி நீரவ் மோடியின் கூட்டாளி சுபாஷ் சங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மும்பை அழைத்து வந்தனர்.



பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்த 2018 ம் ஆண்டு ரூ13,578 கோடி அளவுக்கு நடந்த மோசடி வெளியானது. இதில் தொடர்பு உள்ளதாக பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீரவ் மோடி, குடும்பத்தினர், உறவினர்கள், கூட்டாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


latest tamil news




இந்நிலையில் வங்கி மோசடியில் தொடர்பு உள்ளதாக நீரவ் மோடியின் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்த சுபாஷ் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டவுடன் அவர் தலைமறைவானார். அவர் எகிப்த் தலைநகர் கெய்ரோ அருகே தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இன்று, சுபாஷ் சங்கரை அதிகாரிகள் மும்பை அழைத்து வந்தனர். நீரவ் மோடியின் பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகளை, சுபாஷ் சங்கர் தான் செய்து வந்து தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் 14 நாட்கள் தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க கோரினர். இதனை ஏற்ற நீதிமன்றம் ஏப்.,26 வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202215:38:06 IST Report Abuse
ராமகிருஷ்ணன் கமிஷன் வாங்கிய களவாணி காங்கிரஸ் தலைகளின் புலம்பல் இது. பிரமிட்டில் உள்ளயே போய் மம்மிக்கு அருகே மறைந்து படுத்து இருந்த ஆளை தூக்கி வந்துவிட்டார்களே, அடுத்து வேற கிரகத்திற்கு தான் தப்பி போக வேண்டுமா என்று புலம்புகிறார்கள்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
12-ஏப்-202215:34:35 IST Report Abuse
R.RAMACHANDRAN பங்கு வர்த்தக முகவர் ஹர்ஷத் மேத்தாவிற்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இன்றைய மதிப்பில் இரத்தின வியாபாரி நீரவ் மோடி வகையறாக்களுக்கு பதின்மூன்றாயிரம் கோடிகள் கடன் கொடுத்து வெளி நாட்டிற்கு தப்ப வைத்து நாடகமாடுவது இந்த நாட்டில் மட்டுமே நடக்கிறது.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-ஏப்-202213:53:12 IST Report Abuse
pattikkaattaan இவர்கள் எல்லாம் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ?.. ஏன் கேட்கிறேன் என்றால் "திருட்டு திராவிடர்கள்" என்று ஒரு கூட்டம் தொடர்ந்து கூறிவருகிறது .. உண்மையான திருடர்கள் யார் என்று அவர்களுக்கும் தெரியும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X