தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்!

Added : ஆக 24, 2011
Share
Advertisement
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தின்போது, வர்த்தக நோக்கில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னைக்கு வந்தது. இந்த கம்பெனியின் வர்த்தகத்தை மேம்படுத்த வசதியாக, துறைமுகத்தை ஒட்டிய ராயபுரம் பகுதியில், ரயில் நிலையம் அமைக்க, திட்டமிடப்பட்டது. 1853ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்தன. இவை 1856ல் அப்போதைய கவர்னர், லார்ட் ஹாரிஸ் திறந்து வைத்தார். சிம்சன் அண்டு கம்பெனி

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தின்போது, வர்த்தக நோக்கில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னைக்கு வந்தது. இந்த கம்பெனியின் வர்த்தகத்தை மேம்படுத்த வசதியாக, துறைமுகத்தை ஒட்டிய ராயபுரம் பகுதியில், ரயில் நிலையம் அமைக்க, திட்டமிடப்பட்டது. 1853ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்தன. இவை 1856ல் அப்போதைய கவர்னர், லார்ட் ஹாரிஸ் திறந்து வைத்தார். சிம்சன் அண்டு கம்பெனி உருவாக்கிய ரயில், ஆங்கிலேயேர்கள், கிழக்கிந்திய கம்பெனியினர், சிறப்பு விருந்தினர்கள் 300 பேருடன், ராயபுரத்தில் இருந்து, ஆற்காடு அருகே உள்ள வாலாஜாபாத் வரை சென்றது. தற்போது இந்த ரயில் நிலையத்தின் வயது 155.
இந்த ரயில்நிலையம், தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமை பெற்று விளங்குகிறது. இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பு எல்லாரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. சுற்றுலா தளமாகவும், சினிமா படப்பிடிப்பு தளமாகவும் இருந்தது.
ரயில்வேயின் கவனிப்பின்மையால், கட்டடம் சிதிலிமடைந்து போனது. பின் "தினமலர்' சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, ரயில் நிலையம் பராமரிக்கப்பட்டு, தற்போது, நாட்டின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின், 1873ல் துவக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், 1906ல் துவக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையங்கள் அதிக வேக வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையத்தை, ரயில்வே நிர்வாகம் மேம்படுத்தாமல் விட்டுவிட்டதே என்ற கவலை மக்களிடம் இன்றளவும் இருந்து வருவதுதான் வேதனை.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X