உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேருங்கள்: ஏ.ஐ.சி.டி.இ அறிவுறுத்தல்

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: உக்ரைன் போரால் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரால் உக்ரைனில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவர்கள் மத்திய அரசின் உதவியோடு நாடு திரும்பினர். போர் தொடர்ந்து வருவதால்,
AICTE, Give Vacant Seats, Ukraine Returnees, உக்ரைன், மாணவர்கள், கல்வி, படிப்பு, கல்லூரி, ஏஐசிடிஇ

புதுடில்லி: உக்ரைன் போரால் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.



உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரால் உக்ரைனில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவர்கள் மத்திய அரசின் உதவியோடு நாடு திரும்பினர். போர் தொடர்ந்து வருவதால், மாணவர்களின் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.



latest tamil news


இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், போர் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் 20 ஆயிரம் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், உக்ரைனில் எந்த பாடப்பிரிவில், எந்த ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதையே இங்கேயும் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஏப்-202209:04:36 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசு நாலு மந்திரிங்களை மாநிலங்களுக்கு அனுப்பி தீர்வு காணலாம். விடியல் முதல்வர், தமிழக மாணவர்களுக்கு மட்டும் தமுழக ஐ.ஐ.டி, என்.ஐ.டி களில் இடம் வாங்கித்தரலாம். வெளிநாட்டுக்கே போய் உதவத் தயாரா இருந்தவங்க, இதையும் செய்யமாட்டாங்களா?
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
12-ஏப்-202222:42:36 IST Report Abuse
Fastrack துபாயில் சென்று படிப்பை தொடரலாம் ..
Rate this:
Cancel
12-ஏப்-202214:49:58 IST Report Abuse
ஆரூர் ரங் பாடத் திட்டமே வேறு எனும் போது எப்படி சாத்தியம்? இந்த மாணவர்கள்😆 ஏழைகளல்ல . சமமான பாடத்திட்டம் உள்ள நாடுகளில் படிப்பைத் தொடர்வதே சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X