வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன் :கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கும், நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும், லண்டன் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 2020ம் ஆண்டில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்த போது, ஜூன் 19ல் பிரதமர் போரீஸ் ஜான்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இதையொட்டி லண்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் மது விருந்து நடந்தது, அதில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
![]()
|
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி, மது விருந்து நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து லண்டன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விதிமுறைகளை மீறி, மது விருந்து நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு துவக்கத்தில், பார்லிமென்டில் போரீஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி, பிரதமர் போரீஸ் ஜான்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருக்கு. லண்டன் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு 'நோட்டீஸ்'அனுப்பியுள்ளனர்.