பாக்., அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை 'கட்': புதிய பிரதமர் உத்தரவு

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், 70, தன் அலுவல்களை நேற்று துவக்கினார். முதல் நாளிலேயே பாக்., அரசு ஊழியர்களுக்கான இரண்டு நாள் வார விடுமுறையை ஒரு நாளாக குறைத்ததுடன் அலுவலக நேரத்தையும் மாற்றி உத்தரவிட்டார்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக,
Shehbaz Sharif, Pakistan PM, Leave Cut

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், 70, தன் அலுவல்களை நேற்று துவக்கினார். முதல் நாளிலேயே பாக்., அரசு ஊழியர்களுக்கான இரண்டு நாள் வார விடுமுறையை ஒரு நாளாக குறைத்ததுடன் அலுவலக நேரத்தையும் மாற்றி உத்தரவிட்டார்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது.இதையடுத்து பாக்.,கின் 23வது பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாக்., பிரதமராக மூன்று முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான இவர், பஞ்சாப் மாகாண முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.புதிய பிரதமராக தன் அலுவல்களை நேற்று துவக்கிய ஷெபாஸ், காலை 8:00 மணிக்கே அலுவலகம் வந்தார். அந்நாட்டில் அரசு அலுவலர்கள் பணி நேரம் காலை 10:00 மணிக்கு துவங்கும் என்பதால், மற்ற அரசு ஊழியர்கள் அந்நேரம் அலுவலகம் வரவில்லை. பொறுப்புகளை ஏற்றவுடன் அரசு ஊழியர்களின் பணி நேரத்தை காலை 10:00 மணியில் இருந்து 8:00 மணியாக மாற்றி உத்தரவிட்டார். அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு நாள் வார விடுமுறையை ஒரு நாளாக குறைத்து உத்தரவிட்டார்.


latest tamil newsபிரதமர் அலுவலக ஊழியர்களுடன் உரையாடுகையில், 'மக்களுக்கு சேவையாற்றவே நாம் இங்கு இருக்கிறோம். ஒரு நொடியைக் கூட வீணடிக்க கூடாது. நேர்மை, வெளிப்படைத்தன்மை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு நம்மை வழிநடத்தும் கொள்கைகளாக இருக்க வேண்டும்' என, அவர் கூறியதாக தகவல் வெளியானது.மேலும், குறைந்தபட்ச ஊதியத்தை 25 ஆயிரமாக நிர்ணயித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் உடனான அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.அமைச்சரவையை இறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகிறது. பாக்., மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடிக்கு நன்றி!


பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஷெபாஸ் ஷெரீப் நேற்று வெளியிட்ட அறிக்கை: வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது.ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தவிர்க்க முடியாதது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தான் செய்த தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. அமைதியை பாதுகாப்போம், மக்களின் சமூக -பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
13-ஏப்-202211:33:39 IST Report Abuse
Nagercoil Suresh பள்ளி கல்லூரிகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் துவக்கினால் ட்ராபிக் ஜாம் ஆகும் அதையெல்லாம் குறித்து புதிதாக வந்திருப்பவர் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை, அதிரடியை காட்டுகிறார் புது மருமகளை மாதிரி...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13-ஏப்-202210:22:41 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் அங்குள்ள தீவிரவாதிகள், விடுப்பே எடுக்காமல் வருடம் முழுவதும் 'தீவிரவாதத்தில்' 'தீவிரமாக' பணிபுரிகின்றனர்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஏப்-202209:55:03 IST Report Abuse
M  Ramachandran இஙகு உள்ள தமிழ் நாட்டில் இது மாதிரி நடவடிக்கையை எடுப்பார்கள். இந்த மாதத்தில் மட்டும் வங்கிகள் சம்பந்தமில்லை கோரிக்கைகளை வைத்து நான்கு நாட்கள் போறட்டம் என்ற பெயரில் மக்களாய் விதைக்கிறார்கள். உடனே அப்புறம் பங் ஹாலிடே என்று மூடி கொண்டார்கள். இந்த வாரம் வியாழக்கிழமையிலிருந்து ஞ்சாயிரு முடிய விடுமுறை.. வங்கிகளை தனியார் மயா மாக்கல் அவசியம். அதன் லாப நஷ்டம் அரசின் தலையில் வந்து விழாது. இந்த கம்யூனிஸ்டுக்கள் நாட்டின் முனேற்றத்திற்கு தலைவலி. அயல் நாட்டு கைக்கூலிகள். இந்தியாவில அதும் நம் தமிழ்நாட்டிலுள்ளது போனால் வாங்கி விடுமுறைகள் எங்கும் இல்லைய. மஞ்ச தூண்டுவின் கைய்ங்கரியும். வங்கி என்பது வியாபார நிறுவனம். இஙகு எதிரிடையாக நடக்கிறது. அலகு வேலையை இருப்போருக்கு எல்ல சலுகையும் பெற்று கொண்டு நம் பணத்தில் நம்மைய விட குறைவான வட்டி வீதத்தில் வீட்டு கட்ட லோன். இத்தலம் பற்றாது என்று வருடத்திற்கு இரண்டு மூன்று முறை ஸ்ட்ரைக் வெயாரே. வயித்தெரிச்சல் தான்.இப்போர் எதற்கெடுத்தாலும் நம்மிடம் சேவய் என்று பணம் பிடுஙகு கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X