5ஜி ஏலத் தொகை அதிகம்: 90% குறைக்கக் கோரும் டெலிகாம் ஆபரேட்டர்கள்

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புது டில்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள அடிப்படை விலைகள் மிக அதிகம் எனவும் மறுபரிசீலனை செய்யுமாறும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்தியாவில் தற்போது 4ஜி இணைய சேவை வசதி கிடைக்கிறது. அதன் அடுத்த நிலையான 5ஜி சேவையை பல்வேறு நிறுவனங்கள் சோதித்து வருகின்றன. 4ஜியை காட்டிலும் 20 மடங்கு


புது டில்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள அடிப்படை விலைகள் மிக அதிகம் எனவும் மறுபரிசீலனை செய்யுமாறும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



latest tamil news




இந்தியாவில் தற்போது 4ஜி இணைய சேவை வசதி கிடைக்கிறது. அதன் அடுத்த நிலையான 5ஜி சேவையை பல்வேறு நிறுவனங்கள் சோதித்து வருகின்றன. 4ஜியை காட்டிலும் 20 மடங்கு அதிவேக இணைப்பை 5ஜி மூலம் பெறலாம். இதன் மூலம் கல்வி, மருத்துவம், ஐ.டி., வங்கி, பொழுதுபோக்கு என பல துறைகளும் புதிய பாய்ச்சலை பெறும். இந்தாண்டு இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடக்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தனர்.

அதற்கான பணிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியப் பங்கேற்பாளர்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளன.


latest tamil news



தற்போது அச்சங்கம் 5ஜி ஏலத்திற்கான அடிப்படை விலையை குறைக்க கோரியுள்ளது. ஏற்கனவே டிராய் 5ஜி நெட்வொர்குகளுக்கான பல்வேறு அலைக்கற்றைகளின் விலைகளை 35 முதல் 40 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும் 90 சதவீதம் குறைக்கும் படி கேட்கின்றனர். மேலும் நிறுவனங்களுக்கு நேரடியாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதையும் விமர்சித்துள்ளது. நேரடி ஒதுக்கீடு பெரிய நிறுவனங்கள் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதை தடுக்கும் என கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஏப்-202214:49:54 IST Report Abuse
Rafi இதுவரை BSNL அரசு துறை நிறுவனத்திற்கு 4G கூட வழங்காமல் அதை முடக்கி கார்பொரேட் கொழிக்க துணை இருந்தார்கள். இப்போது அவர்கள் 90 சதம் குறைக்க கேட்கின்றார்கள் என்றால் 2G யை விட குறைவாக கேட்க போகின்றார்கள் என்பது புலனாகின்றது. அவர்கள் கட்சி வளர்ச்சி அடைய துணை போக கூடும். 2G மூலம் மக்கள் குறைந்த விலையில் பயன் அடைந்தார்கள், இப்போது வழக்கம் போல் மக்கள் தலையில் பாரங்கள் ஏற்ற முயல்வார்கள்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
13-ஏப்-202215:20:23 IST Report Abuse
Barakat Aliஎந்த தொழில் நுட்பமும் அது வந்த புதிதில் காஸ்டலியாகத்தான் இருக்கும் .............
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
13-ஏப்-202213:49:56 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் அலைக்கற்றை விலையை 90% சதவீதம் குறைக்கக் கோருவது நகைப்பாக உள்ளது. அண்ணன்களின் தானே கேட்கறாங்க. 100% குறைச்சி ஓசியிலேயே கொடுக்கச் சொல்லி கேட்கலாமே. என்னமோ இவர்கள் சலுகை விலையில் மக்களுக்குத் தரப்போவதுபோல் கண்ணீர் வடிக்கிறார் கள். சமீபத்தில் விலையேற்றிய இவர்கள் 5ஜிக்குப் பிறகும் தாராள மனதோடு விலையைக் கூட்டத்தான் போகிறார்கள். இதில் கோரிக்கை வேறு.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-ஏப்-202208:47:03 IST Report Abuse
அசோக்ராஜ் ஹூம். மாறனும் இராசாவும் அலைக்கற்றைகளை ஆண்ட அந்தப் பொற்காலம் மீண்டும் வருமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X