வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'வாகன உற்பத்தி நிறுவனங்கள் பரிந்துரைத்த வரம்பிற்குள், வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது பாதுகாப்பானது' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில் வாகனத்தில் பெட்ரோலை பாதி நிரப்பினால் போதும். அதிகம் நிரப்பினால் எரிபொருள் டேங்கில் வெடிப்பை ஏற்படுத்தும். ' என, தவறான தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் விடுத்த செய்திக் குறிப்பு: மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள், செயல்திறன் தேவை, பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் வைத்து, வாகனங்களை வடிவமைக்கின்றன. எனவே, குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும் அதிகபட்ச வரம்பிற்கு வாகனங்களில் எரிபொருளை நிரப்பலாம். அது முற்றிலும் பாதுகாப்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.