நம்பி போட்டாங்க ஓட்டு; நல்லா வச்சாங்க வேட்டு!

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
தி.மு.க.,வை நம்பி வாக்களித்து அமோகமாக வெற்றி பெற வைத்த கோவை மக்களுக்குப் பரிசாக, மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்திலேயே, வீடுகளுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், மக்களுக்கு மகிழ்ச்சி தரும் எந்தப் பெரிய திட்டமோ, தீர்மானமோ நிறைவேற்றப்படவில்லை. மாறாக, வீடுகளுக்கான சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்துவதற்கான தீர்மானம், முழு மனதாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


தி.மு.க.,வை நம்பி வாக்களித்து அமோகமாக வெற்றி பெற வைத்த கோவை மக்களுக்குப் பரிசாக, மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்திலேயே, வீடுகளுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
latest tamil news

கூட்டத்தில், மக்களுக்கு மகிழ்ச்சி தரும் எந்தப் பெரிய திட்டமோ, தீர்மானமோ நிறைவேற்றப்படவில்லை. மாறாக, வீடுகளுக்கான சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்துவதற்கான தீர்மானம், முழு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.தீர்மானத்தின்படி, 600 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு மட்டுமே, 25 சதவீதம் என குறைந்தபட்ச வரி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதற்கு மேல் 601-1200 சதுரஅடி, 1201-1800 சதுரஅடி, 1800 சதுரஅடிக்கு மேல் என குடியிருப்புகளின் பரப்புகளுக்கேற்ப 50, 75 மற்றும் 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்துக்கு, அ.தி.மு.க., மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது. தி.மு.க., ஆதரவுடன் வென்ற காங்கிரஸ், கம்யூ., கட்சிகள் மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் அனைவருமே, சொத்துவரியை உயர்த்தக்கூடாது என்று பேசியதோடு நிறுத்திக் கொண்டனர்.latest tamil news

சொத்து வரி உயர்த்தப்பட வேண்டியது, காலத்தின் கட்டாயம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால்சென்னைக்கும், கோவைக்கும் இடையில் இருக்கின்ற சொத்து வரி விதிப்பின் முரண்பாட்டை களைவது அவசியம். அதற்கு கோவைக்கு சில ஆண்டுகளுக்கு, வரி உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது குறைவான சதவீதத்தில் உயர்த்த வேண்டுமென்பதே, கோவை மக்களின் கோரிக்கை.அதாவது, சென்னையில் உயர்த்தப்பட்ட அளவுக்கு இணையாக, கோவையில் சொத்துவரி உயர்த்தப்பட வேண்டுமெனில், கோவையில் 600 சதுரஅடி குடியிருப்பு கட்டடத்துக்கு 20 சதவீதம், 601-1200 சதுர அடிக்கு 40 சதவீதம், 1201-1800 சதுரஅடி கட்டடத்துக்கு 60 சதவீதம், தொழிற்சாலை கட்டடத்துக்கு 30 சதவீதம், வணிக கட்டடங்களுக்கு 40 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உயர்த்த வேண்டும்.அதற்கு மாறாக, 25, 50,75 மற்றும் 100 சதவீதம் என சொத்து வரியை உயர்த்தியிருப்பது, கோவை மாநகராட்சியில் தி.மு.க.,வை அமோகமாக வெற்றி பெற வைத்த மக்கள், அக்கட்சியின் ஆட்சி தங்களுக்கு அளித்துள்ள தண்டனையாகபார்க்கின்றனர்.எனவே, தமிழக அரசாவது மேற்கண்ட அளவில் வரியைக் குறைக்க வேண்டுமென்பதே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த, கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (30)

Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202215:59:12 IST Report Abuse
Venugopal S தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு இவ்வளவு அக்கறை உண்டென்றால் மத்திய பாஜக அரசு மாநில அரசு சொத்து வரியை உயர்த்தாமலேயே உள்ளாட்சிகளுக்கு தர வேண்டிய மானியங்களைத் தருகிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே! பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது இது தான்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஏப்-202215:30:50 IST Report Abuse
D.Ambujavalli சொத்து வரி சொத்து உள்ளவரை மட்டும் பாதிக்காது வீட்டில் குடியிருப்பவரும் அதற்கேற்ப வாடகையை அதிகம் கொடுக்க வேண்டும் இந்த சங்கிலியில் சொத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களின் பாதிப்பையும் பார்க்க வேண்டும்
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
13-ஏப்-202214:43:39 IST Report Abuse
PKN 4 மாநிலங்களை ஜொலிக்க வைத்த மக்களே இது தினசரி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது பாராட்டும்படியான காரியம். ஆனா பணக்காரங்க( சொத்து )வரி கட்டுவது மட்டும் கசக்கும்.கார்பரேட் வரியை மானாவாரியாக குறைத்தவர்கள் தானே இவர்கள்
Rate this:
13-ஏப்-202215:55:19 IST Report Abuse
ஆரூர் ரங்இந்தாண்டு கார்பரேட் வரி வசூல் 58 சதவீதம்👍 உயர்ந்துள்ளது..காரணம்? முன்பு கார்பரேட் லாப டிவிடெண்ட் வரி கிடையாது. இப்போது கார்பரேட் டாக்ஸுடன் லாப வரி சேர்த்து 77 சதவீதம் கட்டுகிறார்கள். முன்பை விட இப்போது வரிஏய்ப்பு மிகவும் கடினம் 🤯 புரிகிறதா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X