குடிபோதையில் ஆணுக்கு தாலி கட்டி திருமணம் செய்த நபர்

Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஹைதராபாத்: குடிபோதையில் ஆணுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது பிரச்னை ஆனதால், போலீசார் முன்னிலையில் இருவரும் பிரிந்தனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த, 22 வயது ஆட்டோ டிரைவர், அருகில் உள்ள மதுக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அங்கு,
குடிபோதையில் ஆணுக்கு தாலி கட்டி திருமணம் செய்த நபர்

ஹைதராபாத்: குடிபோதையில் ஆணுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது பிரச்னை ஆனதால், போலீசார் முன்னிலையில் இருவரும் பிரிந்தனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த, 22 வயது ஆட்டோ டிரைவர், அருகில் உள்ள மதுக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அங்கு, அவருக்கு 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், 1ம் தேதி இருவரும் அதிகமாக மது குடித்துள்ளனர். போதையில் இருந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அருகிலுள்ள ஜோகிநாத் கோவிலில் வைத்து இளைஞருக்கு ஆட்டோ டிரைவர் தாலி கட்டி உள்ளார். பின், இருவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். சில நாட்கள் கழித்து, ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு வந்த இளைஞர், அவரது பெற்றோரிடம் தங்கள் திருமணம் குறித்து கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து துரத்தினர். உடனே போலீஸ் ஸ்டேஷன் சென்ற அந்த இளைஞர், சம்பவம் குறித்து புகார் அளித்தார்.இதையடுத்து, ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.'தனக்கு திருமணம் முடிந்ததை அறிந்து வீட்டில் இருந்து துரத்தியதால், ஆட்டோ டிரைவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லாவிடில், வாழ்க்கை நடத்த 1 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, இளைஞர் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தையின் முடிவில், இளைஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்ததாக ஆட்டோ டிரைவரின் பெற்றோர் எழுதி வாங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஏப்-202206:15:51 IST Report Abuse
அப்புசாமி நல்லவேளை முதலிரவு வரை போகவில்லை. தாலி கட்டிக் கொண்டவர் பாடு என்னாயிருக்குமோ? எப்புடியெல்லாம் ரூம்.போட்டு யோசிச்சு சம்ப்பாரிக்கறாங்க டோய்...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஏப்-202216:14:45 IST Report Abuse
மலரின் மகள் சப்தபதி: தெருக்கூத்துக்களுக்கு பஞ்சமே இல்லை. சின்ன தம்பி என்று ஒருபடம். அதில் மையகருத்தாக வருவது. எந்த சாஸ்திரங்களும் இல்லாமல், வெறுமனே தாலியை மட்டும் காட்டினாலே போதுமானது திருமணம் ஆகிவிட்டது என்று பொருள். உண்மையில் அப்படியில்லவே இல்லை. நமது நீதிமன்றங்கள் சட்டங்கள் எதை ஏற்கின்றன என்று அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும். நமது சட்டங்கள் அவரவர் மத சம்பிரதாயங்களை ஏற்கின்றன. திருமணம் முடிந்து விட்டது என்றால் அதை பத்தியம் பொது எந்த மதத்தின் சடங்குகளின் படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. யார் நடத்தி வைத்தட்டார்கள் என்று கேட்பார்கள். ஜாதி மாறி திருமணம் இருக்கலாம் ஒரே மதத்திற்குள்ளே என்றால் எந்த குழப்பமும் இல்லை. மதம் மாறும் பொது தான் சங்கடங்கள் வரும். இருவரும் வெவ்வேறு மாதமாக இருந்தால் எந்த மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்களோ அந்த மதத்தை மணமகனும் மணமகளும் ஏற்றிருக்கவேண்டும். இருவருமே கூட தங்களின் தாய்மத்தை விடுத்து வேறுஒரு மதம் சார்ந்தும் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம். மதமே கிடையாது என்று சொல்வதற்கு நமது சட்டத்தில் வழிமுறைகள் இல்லைபோலும். உலகில் ஏறத்தாழ ஆறில் ஒருபங்கு மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இருக்கிறார்கள். நம்நாட்டில் அப்படியல்ல. கடவுள் மறுப்பவர்னும் எதாவது ஒரு மதத்தை சார்ந்தே இருக்கிறான். எதோ இந்த திராவிட காட்சிகள் சீர்திருத்த திருமணம் என்று எதோ செய்துகொண்டு வருகின்றன, எப்படி தான் செய்தாலும் பின்னாளில் அவர்கள் எதோ ஒரு கோவிலில் வைத்து மீண்டும் உண்மையான திருமணம் செய்து கொள்கிறார்கள் போல, அதைத்தான் பதியும்போது சொல்கிறார்கள் போல. அல்லது இந்துவாக இருந்தால் திருமனந்த்தை பதிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. திருமணத்தை பதியும்போது நிச்சயம் எந்த மதத்தின் அடைப்படையில் ஆர் நடத்தி வைத்தார்கள் என்றதகவலை சாட்சியுடன் தந்தே தீரவேண்டும். இராஜம் கிருஷ்ணன் அநுத்தமாவின் புத்தகங்களை படித்து பாருங்கள். லலிதா என்ற திரைப்படத்திலும் வரும். சப்தபதி என்ற இந்துமத சடங்கு. அந்த சடங்குகள் நடந்தால் தான் திருமணம் நடந்ததாக கருதப்படும். தாலி என்பது திருமணம் செய்து கொண்டதற்கு ஒரு அத்தாட்சி அவ்வளவு தான். வடஇந்தியர்கள் தாலி பூவனுவது இல்லை. உச்சி நெற்றியில் இடும் திலகமே அதற்கு திருமணம் ஆனதற்கு சான்று. தென்னிந்தியாவில் தாலியை பெண்கள் பூணுவதும், ஆண்களுக்கு மெட்டியை அனுவிப்பதுமே வழக்கம். ஆண்களுக்கு பொதுவாக வெள்ளியிலும், பெண்களுக்கு தங்கத்திலுமாக உயர்வைத்தார்கள் நமது முன்னோர்கள். பின்னாளில் எனோ தெரியவில்லை ஆண் தனது மெட்டியைறும் பெண்ணுக்கே கழற்றி கொடுத்துவிட்டான். போகட்டும். சபதபதி என்ற சட்டங்கள் செய்வதில் ஆண் (மணமகன்)மட்டுமே பெண்ணுக்கு (மணமகளுக்கு) உறுதிமொழி சத்தியம் செய்து கொடுக்கிறான். அதை பெண்ணும் இணைந்து அவள் பொருட்டிற்கு மவுனம் சம்மதம் என்றவகையில் அவன் கைகோர்த்து சாதியினர் முன்னிலையில், முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியாக அக்கினியை வளம் வந்து அக்கினி சாட்சியாக சத்திய பிரமாணம் செய்து திருமணம் பந்தத்தை ஏற்கிறார்கள். அது உறியுள்ளவரி நிலையான பந்தம். முறிவு என்பது கிடையாது. சப்தபதி சடங்கை தான் நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் திருமணமானதற்கு உறுதியானதாக ஏற்கின்றன. விவாகமுறிவு என்பது ஒரு சமூக நிகழ்வு, ஒரு தீர்வுதான் ஒழிய அது மத அடிப்படையில் அல்ல. விவாகம் ரத்தாக முடியாது. செய்து கொடுத்த சப்தபதி சத்தியம் அப்படிப்பட்டது. இந்து மதத்தின் அடிப்படையில் சப்தபதி என்று சொல்கின்ற ஏழடி எடுத்து வைத்து ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு சத்தியமாக மணமகன் செய்து கொடுப்பதும் அதை மணமகள் ஏற்று அவனுடன் அக்கினி முன்னிலையில் அனைவரின் சாட்சியாக இல்லற பந்தத்தில் இணைவதும் நமது திருமண முறை. காந்தர்வ மனங்கள் என்பது வேறுவகை அது சாமானியர்களுக்கு - மானிடர்களுக்கு அல்ல. திருட்டு தனமாக அபகரித்து செல்லும் வழக்கம் பைசாச முறையில் அரக்ககுணமாக இருக்கும். அது திருமணமே அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக மனசுத்தி சுவாதீனமானவர்கள் மட்டுமே திருமண பந்தத்தில் இணையமுடியும்.
Rate this:
Cancel
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
13-ஏப்-202215:50:37 IST Report Abuse
Ram Mayilai குடி "குடியை கெடுக்கும்" அத்துடன் ஓரின குடும்பத்தை உண்டாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X