புதுடில்லி: மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்பை பயில, பல்கலை மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது: மாணவர்கள் பன்முகத் திறன்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒரே நேரத்தில், இரு பட்டப் படிப்புகளை பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு பல்கலையில் கற்கலாம். அதுபோல ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொரு பட்டப் படிப்பை 'ஆன்லைன்' வாயிலாகவும் கற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.