மத மாற்றத்திற்கு வற்புறுத்தும் ஆசிரியை; மாணவியின் புகாரால் பரபரப்பு

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு பள்ளியில் தையல் ஆசிரியை மாணவிகளிடம் கிறிஸ்தவ மத பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாகவும், ஹிந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதாகவும் அப்பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த
கன்னியாகுமரி, அரசு பள்ளி, மத மாற்றம், ஹிந்து, கிறிஸ்தவம், பிரார்த்தனை, ஆசிரியை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு பள்ளியில் தையல் ஆசிரியை மாணவிகளிடம் கிறிஸ்தவ மத பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாகவும், ஹிந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதாகவும் அப்பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தனது ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக போலீசில் குற்றம்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


அந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம், தையல் வகுப்புக்கு வரும் ஹிந்து மத மாணவிகளிடம் ஹிந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாகவும் அம்மாணவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.


ஆசிரியை சஸ்பெண்ட்

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் நேரில் விசாரணை நடத்தினார். இதன்முடிவில், ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
14-ஏப்-202200:09:27 IST Report Abuse
Soumya ஓட்டு பிச்சைக்காக இந்துமத ஜென்ம விரோதி இதன் பின்னணியில் உற்சாகபடுத்துவான்
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
13-ஏப்-202220:25:07 IST Report Abuse
jysen She will soon become the HM of the school. Nothing will happen to her. We have to brace ourselves for living in such a hostile environment. All the Christian Schools, many government aided schools and many purely government schools in Kanyakumari district are engaged in the conversion business. Imparting education is only secondary.
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
13-ஏப்-202218:58:13 IST Report Abuse
sethusubramaniam இதுபற்றி தொலைகாட்சி ஊடகங்களில் செய்தியோ ,விவாதங்களோ வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X